நடிகர் விஜய்க்கு அபராதம்… வருமான வரித் துறை உத்தரவு நிறுத்தி வைப்பு!

Madras HC stays I-T department order imposing fine on actor Vijay Tamil News: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபாரதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு அபராதம்… வருமான வரித் துறை உத்தரவு நிறுத்தி வைப்பு!
Madras high court passed an interim order staying on income tax department order Tamil News:

Actor Vijay Tamil News: கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் புலி. இயக்குநர் சிம்புதேவன் இயக்கி இப்படத்தை ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரித்தனர். இத்திரைப்படம் வெளியான போது நடிகர் விஜய்யின் வீடு, அலுவலகம், படத் தயாரிப்பாளர்களான பி.டி. செல்வகுமார், ஷிபு தமீன்ஸ், பைனான்ஷியர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், புலி படக்குழுவினர் சுமார் 25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி மறைத்ததாகவும் கூறப்பட்டது. மேலும், நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இது தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor vijay madras hc stays income tax dept order imposing fine