Advertisment

நடிகர் விசுவுக்கு ரஜினி உள்ளிட்ட திரையுலகினர் புகழஞ்சலி

மறைந்த திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு அவர்களின் உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor visu passes away, visu passes away, visu died at 75, நடிகர் விசு காலமானார், விசு காலமானார், விசு மரணம், visu death, cinema stars condolence to visu death, visu no more, visu died, visu, actor visu, director visu

actor visu passes away, visu passes away, visu died at 75, நடிகர் விசு காலமானார், விசு காலமானார், விசு மரணம், visu death, cinema stars condolence to visu death, visu no more, visu died, visu, actor visu, director visu

திரைப்பட நடிகரும் இயக்குனருமான விசு நேற்று (மார்ச்22) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரின் மறைவுக்கு திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர், மேடை நாடக இயக்குனர், என பன்முகங்களுக்கு சொந்தக்காரர்.

நடிகர் விசு தனது சினிமா வாழ்க்கையில், தமிழ் சினிமா உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே.பாலச்சந்தரிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனர் ஆனார்.

நகரமயமாக்கல், பொருளாதார மாற்றம் தமிழ்ச் சமூகத்தில் கூட்டுக் குடும்ப அமைப்புகளை எப்படி மாற்றியது என்பதை விசுவின் திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. நகைச்சுவை கலந்து நடுத்தர குடும்பங்களின் நெருக்கடியை உறவுகளுக்கு இடையேயான விரிசல்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் இணக்கத்தையும் விசு படங்களே பெரிய அளவில் பதிவு செய்துள்ளன.

விசு சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி, புதிய சகாப்தம், உளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். நல்லனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மன்னன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சன்  டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் விவாத நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் டாக் ஷோவை தொடங்கி  மக்களிடையே பேசவைத்தவர்.

75 வயதான நடிகர் விசு முதுமையால், சிறுநீரகப் பிரச்னை காரணமாக கிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஒக்கியம்பேட்டில் ஐஸ்வர்ய பிரபஞ்ச மாதா கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் சுயர் ஊரடங்கு அமலில் உள்ளதால் விசுவின் இறுதிச் சடங்கு பற்றி அவரது குடும்பத்தினர் இன்னும் அறிவிக்கவில்லை.

விசுவின் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர், உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு.விசு அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

பன்முக திரைக்கலைஞர் திரு.விசு அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று தெரிவித்துள்ளார்.

விசு இயக்கிய பல படங்களில் நடித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், என் அருமை 50 ஆண்டுகால நண்பன் நாடக திரைப்பட கதை வசனகர்தா இயக்குனர் விசு சற்றுமுன் நம்மை விட்டு பிரிந்து விட்டார். மிகப்பெரிய இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., சார்பில் மரியாதை : விசுவின் உடலுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் இன்று காலை 8 மணிக்கு அஞ்சலி செலுத்தினார்.

”விசு சார் RIP-தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர். தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர். “உங்கள் மாமனாரைக் கேட்டுப்பாருங்கள்”என்ற வீடியோவை 10 தடவை பார்த்திருப்பேன். அடிக்கோடிட்ட வாதம். மரணத்திற்கு முன்பான சாதனையே மனதோடு ஒட்டிக்கொள்வது அப்படிப்பட்டது விசு சாரின் வாழ்க்கை” என்று நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய். போய் வா நண்பா! அடுத்த பிறவியில் சந்திப்போம்” என நடிகர் சிவக்குமார் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

”விசு ஒரு யதார்த்தவாதி, அவரது படங்களில் சமூக சிந்தனைகள் பரவி இருக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தனிமையை தொடர்வோம் என குறிப்பிட்டுள்ள சரத்குமார், விசுவின் இறுதி ஊர்வலம் புறப்படும் போது அவரவர் வீட்டு வாசலில் கருப்பு உடையுடன், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம் என” நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

"இந்த லெஜண்ட் நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஒரு அற்புதமான எழுத்தாளர், அருமையான இயக்குனர், தனித்துவமான நடிகர், சொற்பொழிவாளர் தனது உணர்வுகள் மற்றும் நகைச்சுவையான உரையாடல்களால் குடும்பங்களை கவர்ந்தார். அவரது படங்கள் இன்றும் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன! விசு ஐயாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த இரங்கல்!” என இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி இரங்கல்

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்

பிரபல இயக்குநர்-நடிகர் மற்றும் எனது நண்பருமான திரு. விசு அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். டௌரி கல்யாணம், ஊமை விழிகள், புதிய சகாப்தம் உள்ளிட்ட படங்களில் அவருடன் நடித்த நாட்கள் என்றும் நினைவில் நிற்கும். பன்முகத் திறமையும், நல்ல மனமும் கொண்ட திரு. விசு அவர்களின் இழப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், நண்பர்கள், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

வைரமுத்து அஞ்சலி

விசுவின் மறைவு வேதனை.

கருத்துள்ள கதை, கத்திபோல் உரையாடல்,

நம்பகத் தன்மைமிக்க நாடகம்,

நாகரிகத் திரைக்கதை எல்லாம்

கைவரப் பெற்ற கலைஞன்.

சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி

பாடல் எழுதிய பழைமை மறக்காது.

விசு நீண்டகாலம் நினைக்கப்படுவார்.

நடிகர் விவேக்

மிக நேர்மையாக, உண்மையாக , கண்ணியமாக அதே நேரம் கண்டிப்பாக வாழ்ந்து, நம்மைப் பிரிந்து இருக்கும் விசு அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதய அஞ்சலி. நேரில் வந்து இறுதி மரியாதை செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment