Advertisment

அ.தி.மு.க பொதுக்குழு பேனர்கள் கிழிப்பு: வானகரத்தில் பரபரப்பு

அதிமுக பொதுக்குழு நடைபெறு இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு; வானகரத்தில் பரப்பு

author-image
WebDesk
New Update
அ.தி.மு.க பொதுக்குழு பேனர்கள் கிழிப்பு: வானகரத்தில் பரபரப்பு

ADMK banners tore at Vanagaram Gerenal committee meeting place: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளநிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் வானகரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழு தொடர்பான 23 தீர்மானங்களில், ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை என்றாலும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுப்பப்படும் தெரிகிறது.

இதையும் படியுங்கள்: மோசடி வழக்குகளில் தொடர்புடையவருக்கு தமிழக பா.ஜ.க.,வில் மாநில பதவி

இதனிடையே பொதுக்குழுவை தள்ளிவைக்க இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினார். அது பலனிக்காத நிலையில், ஆவடி காவல் ஆணையகரத்தில் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என மனு அளித்தார். ஆனால் காவல்துறை ஓ.பி.எஸ் மனுவை ஏற்கவில்லை.

இதனிடையே பொதுக்குழு உறுதியாக நடைபெறும் இ.பி.எஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பொதுக்குழுவில் கலந்துக்கொள்ள ஓ.பி.எஸ்-க்கு ஈ.பி.எஸ் கடிதம் எழுதினார்.

இந்தநிலையில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில், பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு பேனர்களை கிழித்ததாக இ.பி.எஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment