2035 இலக்கை இப்பவே தாண்டிய தமிழ்நாடு: உயர்கல்வி சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் அதிமுக

ADMK claims pride for higher education GER rise in tamilnadu on 2019-2020: இந்த உயர்கல்வி சேர்க்கை விகித உயர்வு அம்மா வகுத்த பாதையை பின்பற்றிய அதிமுக ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்

தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதம் 51.4% ஆக உயர்ந்துள்ளது. இதனை கடந்த அதிமுக அரசின் சாதனையாக அதிமுக சொந்தம் கொண்டாடுகிறது. இந்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 2035 ஆம் ஆண்டில் தேசிய கல்வி கொள்கையின் இலக்கான 50% ஐ விட அதிகமாக உள்ளது.

தற்போது மாநிலத்தில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் 2019- 2020 ஆண்டில் அதிமுக ஆட்சி செய்ததால் இந்த உயர்கல்விச் சேர்க்கை உயர்வை அதிமுக தனது அரசின் சாதனையாக பெருமையாக கூறி வருகிறது.

2011 ஆண்டில் மாநிலத்தின் மொத்த உயர்கல்விச் சேர்க்கை விகிதமான  ஜி.இ.ஆர் 32.9% ஆக இருந்தது. தற்போது இந்த விகிதம் கிட்டதட்ட சுமார் 20% அதிகரித்துள்ளது. ”இந்த உயர்கல்வி சேர்க்கை விகித உயர்வு அம்மா வகுத்த பாதையை பின்பற்றிய அதிமுக ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

2019-20 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய ஆய்வு, மொத்த சேர்க்கையில் மட்டுமல்லாமல், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்திலும், ஆராய்ச்சி மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதம் மற்றும் மாணவர்-ஆசிரியர்கள் விகிதத்திலும் தமிழக அரசு முன்னணியில் உள்ளது என்று கூறுகிறது. இதில் மாணவர்கள்- ஆசிரியர் விகிதம் என்பது, எத்தனை மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார் என்ற கணக்கீடு ஆகும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு, மாநில அரசு நான்கு பொறியியல் கல்லூரிகளையும், 21 பாலிடெக்னிக் கல்லூரிகளையும், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் திறந்தது. தவிர, உயர்கல்வித் துறையும் 1,666 புதிய படிப்புகளை தொடங்கியது என்றும் முன்னாள் அமைச்சர் அன்பழகன் கூறினார்.

மேலும், முந்தைய அதிமுக அரசு ஆறு சட்டக் கல்லூரிகள், நான்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரிகள், 17 மருத்துவக் கல்லூரிகள், ஐந்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் திறந்தது. இவ்வாறு புதிய கல்லூரிகள் மற்றும் புதிய படிப்புகள் தொடங்கப்படுவதால், தமிழக அரசு உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் அன்பழகன் கூறினார்.

இதனிடையே இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கையில் உத்திரபிரதேச மாநிலம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், தமிழ் நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk claims pride for higher education ger rise in tamilnadu

Next Story
வேலூர் மலை கிராம மக்களிடம் நகை,பணம் கொள்ளை; சோதனைக்கு சென்ற 3 காவலர்கள் கைதுTamil Nadu , Tamil Nadu police
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com