Advertisment

நீளும் லிஸ்ட்… ஸ்டாலினை பாராட்டிய மேலும் ஒரு அதிமுக மாஜி!

ஜெயலலிதா காலத்தில் இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மைத்ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வில் ஏற்பட்ட உள்கட்சி சலசலப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக, மைத்ரேயன் திமுக வில் இணைய உள்ளார் எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் பேச்சுகள் அடிப்பட்டு வந்தன.

author-image
WebDesk
New Update
நீளும் லிஸ்ட்… ஸ்டாலினை பாராட்டிய மேலும் ஒரு அதிமுக மாஜி!

ADMK Ex.MP Maithreyan Praising DMK Government : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமடைந்ததன் காரணமாக, சுகாதார மற்றும் பொருளாதார இக்கட்டான நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றது. கொரோனா தடுப்பு பணிகளை தனது முதல் கடமையாக முழு வீச்சுடன் செயல்படுத்துவதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு உறுதியளித்தார். அந்த வகையில், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அடுத்தடுத்த பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து, பொதுமக்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரையும் முதலமைச்சர் ஸ்டாலின் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Advertisment

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்த ஓரிரு நாள்களுக்கு பிறகு, கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை அறிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பன்னீர் செல்வம் பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்திருந்தார். முதல்வரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் பன்னீர் செல்வம் பாரட்டு தெரிவித்து வந்தார். பன்னீர்செல்வத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சியின் செயல்பாடுகளுக்கு, எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக பாராட்டு தெரிவிப்பது தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மேலும் ஒரு அதிமுக மாஜி, திமுக அரசை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தின் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகரகளுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் எதுவும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் வருமானம் இழந்து தவித்து வரும் அவர்களுக்கு நிவாரண உதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரின் உத்தரவின் படி, அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக, திருக்கோயில் ஊழியர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகையும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக முன்னாள் எம்.பி.மைத்ரேயன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள்,பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அறநிலையைத் துறை அமைச்சர் சேகர் பாபுவையும் மனதார பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதாவின் அபிமானியும், ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற்றவருமான மைத்ரேயன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகளால் அதிமுக வில் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், ராஜ்ய சபை உறுப்பினரும் பதவிக்கும் அவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. ஜெயலலிதா காலத்தில் இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மைத்ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வில் ஏற்பட்ட உள்கட்சி சலசலப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக, மைத்ரேயன் திமுக வில் இணைய உள்ளார் எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் பேச்சுகள் அடிப்பட்டு வந்தன.

இந்த நிலையில், திமுக அரசாங்கத்தை அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து பாராட்டி வருவது அரசியல் வட்டாரத்திலும், அதிமுக வட்டாரத்திலும் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Stalin Maitreyan Mp Dmk Vs Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment