அதிமுக அணிகள் இணைப்பு குறித்து தலைவர்கள் கூறுவது என்ன?

ஜெயலலிதா மறைவிக்கு பின்னர் அதிமுக அணி இரண்டாக பிளவுபட்டது. சசிகலா அணி என்றும், ஓ.பி.எஸ் அணி என்றும் இரண்டாக செயல்பட்டு வந்தன

ஜெயலலிதா மறைவிக்கு பின்னர் அதிமுக அணி இரண்டாக பிளவுபட்டது. சசிகலா அணி என்றும், ஓ.பி.எஸ் அணி என்றும் இரண்டாக செயல்பட்டு வந்தன. இதனிடையே, ஆர். கே நகர் இடைத்தேர்தலின்போது, இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத் தான் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. இதன் காரணமாக, இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி திகனரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் டிடிவி தினகரனை கைது செய்தனர். அந்த சமயத்தில் அதிமுக அணிகள் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், அணிகள் இணைப்பு சாத்தியமில்லாமல் போனது. இரு அணிகளும் இணைவதற்காக கட்சியில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவித்தால் டிடிவி தினகரன். ஆனால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைவதாக தெரியவில்லை. அணிகள் இணைய காலக்கெடு விதிப்பதாகவும், அவ்வாறு இணையாவிட்டால் துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியை வழிநடத்தப்போவதாக அறிவித்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி அணிக்கோ அதில் உடன்பாடு இல்லை. எனவே, ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, முதலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமி அணியினர், பின்னர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாக்கும் என அறிவித்தனர்.

இதன் பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது என்றும், அதனால் அணிகள் இணைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். முன்னதாக முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு, தற்போது துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறாத ஓபிஎஸ், முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதும் அவ்வாறு தெரிவித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், முக்கிய தலைவர்கள் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிதாக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துகள். தமிழகம் வருங்காலத்தில் மேலும் வளர்ச்சியடையும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் வளர்சியை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூறும்போது, பதவி வெறியை மறைக்க தர்மயுத்தம் என ஓபிஎஸ் மோசடி நடத்தியது அம்பலமாகியுள்ளது என்று தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்த அரசு நீடிக்குமா நீடிக்காது என்பது குறித்து உறுதிபட தெரிவிக்க முடியாது. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவோம் என்று சொன்ன பிறகு எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளதாவது:

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close