Advertisment

ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி மரணம்: மு.க ஸ்டாலின், இ.பி.எஸ், சசிகலா நேரில் அஞ்சலி

ADMK O Panneerselvam Wife Vijayalakshmi passed away Tamil News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கே சென்று அஞ்சலி செலுத்தி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
ADMK O Panneerselvam Wife Vijayalakshmi passed away Tamil News

ADMK O Panneerselvam Wife Vijayalakshmi passed away Tamil News

ADMK O Panneerselvam Wife Vijayalakshmi passed away Tamil News : அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் மறைவிற்கு முன்னணி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனே அவர் சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

மறைந்த விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கே சென்று அஞ்சலி செலுத்தி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் உட்பட அதிமுகவினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறியபோது கண்ணீர் சிந்தினார்.

விஜயலட்சுமி மரணம் குறித்து ஜெம் மருத்துவமனை வெளியிலிட்டுள்ள அறிக்கையில், ஓபிஎஸ் மனைவி கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும் இன்று அவர் வீடு திரும்ப இருந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 6.45 மணிக்கு உயிரிழந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment