Advertisment

ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியா? அனல் பறக்கும் அதிமுக வட்டாரங்கள்

எடப்பாடி தரப்பில் இருந்து பன்னீர்செல்வத்தை சமரசப்படுத்த மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி எனும் ஆயுதம் கையிலெடுக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத அதிமுக வை சார்ந்த ஒருவருக்கு எவ்வாறு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்க்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியா? அனல் பறக்கும் அதிமுக வட்டாரங்கள்

OPS SON O.P.Raveendranath Central Minister News in Tamil : அதிமுக வில் ஏற்படும் சலசலப்புகளும் சமாதானப் பேச்சு வார்த்தைகளுமே தற்சமயத்திற்கான

அரசியல் ஹாட் டாப்பிக். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இருதரப்புமே முட்டி மோதிக் கொண்ட நிலையில், கட்சிக்குள் தனக்கு இருக்கும் அதிகார பலத்தால் ஈபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு பன்னீர்செல்வத்தை பரிந்துரைத்த எடப்பாடி பழனிச்சாமி, அவருடன் சமரசத்திலும் ஈடுபட்டார். அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தும் கட்சியில் எவ்வித பலமும் இன்றி இருப்பதாகவே பன்னீர்செல்வம் கருதுகிறார்.

Advertisment

இதனால், பறிபோன எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இணையாக கொறடா பதவியை தன் ஆதரவாளரான மனோஜ் பாண்டியனுக்கு பெற்றுத் தர, பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் தான் அதிக எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றுள்ளதால், கொறடா பதவியை கொங்கு மண்டல எம்.எல்.ஏக்களில் யாரேனும் ஒருவரோ அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் என யாரோ ஒருவருக்கு வழங்க ஈபிஎஸ் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியிலும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்திலும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட பன்னீர்செல்வத்தை சமரசம் செய்வதற்காக, அவரின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்குவதன் மூலம் சமரசம் செய்து விடலாம் என ஈபிஎஸ் தரப்பு கணக்குப்போட்டுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசில் பெரும்பாண்மையான கூட்டணிக் கட்சிகள் இடம்பெறாத சூழலில், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க தயாராகி உள்ளதாக அதிமுக வில் பேசப்படுகிறது. மத்திய அமைச்சரவைக்கு தேர்வாக தகுதியுடையவராக, கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே உள்ளார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி காத்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துள்ளன.

எடப்பாடி தரப்பில் இருந்து பன்னீர்செல்வத்தை சமரசப்படுத்த மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி எனும் ஆயுதம் கையிலெடுக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத அதிமுக வை சார்ந்த ஒருவருக்கு எவ்வாறு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்க்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அதிமுக வில் பல சீனியர் தலைவர்கள் இருக்கும் போது, ரவீந்திரநாத்துக்கு பதவி வழங்க்கப்பட்டால், இது பல சீனியர் தலைவர்களையும் உசுப்பேற்றிவிட்டதற்கு இணையாகி பன்னீர்ம் தரப்பில் பல சச்சரவுகளையும் ஏற்படுத்தும் என அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், பன்னீர்செல்வத்தை நம்பி அவர் பக்கம் சாய்ந்துள்ள ஒரு சில முக்கிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டு பன்னீர்செல்வம் சமரசம் அடைந்து விட்டாரா என்ற கேள்வியையும் எழுப்பக்கூடும் எனவும் அதிமுக வட்டாரங்களில் ஹாட்டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவருக்கும் இடையில் நடக்கும் அதிகார மோதல்களால் காத்திருந்து குளிர்காய திட்டமிட்டுள்ளாராம் சசிகலா என்பதே அதிமுக முக்கிய நிர்வாகிகளின் குமுறலாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk Sasikala Vs Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment