Advertisment

சைதாப்பேட்டையில் 4,000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்

Chennai Tamil News: சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள மொத்த விற்பனைக் கடையில் சுமார் 4,400 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
சைதாப்பேட்டையில் 4,000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்

The shop was sealed and a notice issued to the owner. (Picture Courtesy: Screenshot from IBC Tamil Youtube)

Chennai Tamil News: சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள மொத்த விற்பனைக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் சுமார் 4,400 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

கடை உரிமையாளர்கள் சட்டவிரோதமாக நிலத்தடியில் எண்ணெயை சேமித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

publive-image

“இன்று நாம் கைப்பற்றிய எண்ணெய் சேறு மற்றும் தூசியால் மாசுபட்டது; அது முற்றிலும் சுகாதாரமற்றதாக இருந்தது. அத்தகைய எண்ணெயை நாம் ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது", என்று கூறுகின்றனர்.

இவ்வளவு பெரிய அளவில் எண்ணெய் சேமிக்கும் கடைக்கு உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் போது சிறிய கடை போல் தோன்றினாலும், நிலத்தடியில் ஒரு இடத்தில் இந்த எண்ணெய்யை சம்ப்பில் சேமித்து வைத்துள்ளனர்.

தினமும் பல பீப்பாய்களில் எண்ணெய் லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு சம்ப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல் தளத்தில் ஒரு பெரிய தொட்டி வைத்திருக்கிறார்கள். சம்ப்பில் இருந்து எண்ணெயை மோட்டார் மூலம் பம்ப் செய்து எடுக்கின்றனர்.

பேக்கேஜ், லேபிள், ஐ.எஸ்.ஐ., முத்திரை, நிறுவனத்தின் முகவரி, உற்பத்தி தேதி போன்றவை இல்லாமல் எண்ணெய் விற்பது குற்றமாகும். சில்லறை விற்பனையாளர்கள் எண்ணெய்யை தளர்வாக விற்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது, இந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது”, என்று சென்னையில் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எண்ணெய் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள உணவுக் கடைகளில் பின்பற்றப்படும் தவறான நடைமுறைகள் குறித்து கேட்டபோது, ​​இரண்டு நாட்களுக்கு மேல் மாரினேட் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட இறைச்சி உணவுகள் வழங்குவதைத் தவிர்க்குமாறு உணவகங்களின் உரிமையாளர்களை அதிகாரி வலியுறுத்தியுள்ளார். மேலும், செயற்கை நிறங்கள் கலந்த உணவுகளை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உணவு வண்ணத்தின் அனுமதிக்கப்பட்ட அளவைத் தவிர, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வேறு எந்த செயற்கை நிறத்தையும் சேர்க்கக்கூடாது என்று அவர் கூறினார்.

‘ஷாவர்மா’ சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சதீஷ் குமார், "அரபு உணவான ‘ஷாவர்மா’வை முறையாக தயாரித்து, சேமித்து, சூடுபடுத்தினால் நல்ல உணவாக உட்கொள்ளலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த எண்ணெய்யில் மீண்டும் சமைத்து வழங்கக்கூடாது", என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment