Advertisment

திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு வயது வரம்பு, கல்வித் தகுதி தேவையா?

திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு வயது வரம்பு, கல்வித் தகுதி தேவையா? என்பது அந்தக் கட்சியினர் இடையே விவாதம் ஆகியிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
PTR Palanivel thiyagarajan

திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு வயது வரம்பு, கல்வித் தகுதி தேவையா? என்பது அந்தக் கட்சியினர் இடையே விவாதம் ஆகியிருக்கிறது.

Advertisment

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அந்த அணிக்கு மாவட்ட வாரியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் மொத்தம் 6000 பேரை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க இருக்கிறார். மாவட்டச் செயலாளர் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த நியமனங்கள் நடைபெற இருக்கின்றன.

இதில் விசேஷம், இந்த அணியில் பொறுப்புக்கு விண்ணப்பம் செய்கிறவர்கள் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ். வேர்ட், எக்செல் தெரிந்திருக்க வேண்டும். ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை கடந்த 26-ம் தேதி முரசொலியில் அறிவிப்பாக வெளியிட்டார் பழனிவேல் தியாகராஜன். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு துடிப்பான படித்த இளைஞர்களை கொண்டுவரும் முயற்சி இது என்றாலும், ஏற்கனவே திமுக.வுக்காக இணையத்தில் நெடுநாள் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்த அணியில் பொறுப்புக்கு வர முடியாது.

இது தொடர்பாக திமுக.வுக்காக இணையத்தில் தீவிரமாக இயங்கும் இரு நபர்கள் வெளிப்படுத்திய கருத்துகளை இங்கு பார்ப்போம்.

செளம்யன் வைத்தியநாதன் (நாகை மாவட்டம்)

சில விதிமுறைகள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் செயல்பட்டுவரும் திமுக தொண்டர்கள் பலருக்கு சில வருத்தங்களை ஏற்படுத்தியிருப்பதை கடந்த சில தினங்களில் காண முடிகிறது. தளபதியின் செல்லப்பிள்ளையான இளைஞரணியிலேயே கூட அவர் நிர்ணயம் செய்த வயது வரம்பை கடைபிடிக்க முடியாத நிலையில், புதிதாக உருவாக்கப்படும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு வயது வரம்பும், கல்வித் தகுதியும், இன்னபிற கணினிசார் ஞானங்களும் வேண்டும் என்று அறிவித்திருப்பது தான் பலரது வருத்தங்களுக்கு காரணம் என்று கருதுகிறேன்.

எது எப்படியிருந்தாலும் 6000 பேர் திமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் தொண்டராகத்தான் இவ்வணியில் இருக்க முடியும். அது போதாதா நமக்கு?! விண்ணப்பங்களப் பெற்று நேர்காணலுக்கு ஏற்பாடு செய்வது என்பது மாவட்ட கழக செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், ஃப்ரீ லான்ஸ் வெளி நபர்கள் இல்லாமல் திமுகழக தொண்டர்கள் மட்டுமே இதில் இருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்லியதும் தளபதியார் வகுத்துக்கொடுத்த எல்லைகளாகத்தான் இருக்க முடியும்.

நிச்சயமாக இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மற்ற பொறுப்பாளர்கள் சிலரைப் போல, முரசொலியில் பெயர் வந்தாலே போதும் என்று , அதை வைத்துக்கொண்டு விசிடிங் கார்டு, லெட்டர் பேட் என்று வைத்துக்கொண்டு ஆட்டம் போடவெல்லாம் முடியாது. முழுமையான, முழுநேர கட்சிப்பணி ஆற்ற வேண்டியிருக்கும். அப்படி செயல்பட முடியாதவர்கள் உடனடியாக விடுவிக்கப்படலாம்.

ஆகவே விதிமுறைப்படி இதற்கு விண்ணப்பிக்க இயலாதவர்கள் வருந்த வேண்டியது இல்லை.

ஏனெனில் இந்த அணிக்கும் கழகம் சார்பான சமூக வலைத்தள செயல்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படியாக இங்கிருக்கும் நம்மையெல்லாம் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது மட்டுமல்ல. நமக்கு கிடைக்கும் மரியாதைகளும் பெருமைகளும் அதிகம். ஏனெனில் தலைவர் கலைஞரும், தளபதியாருமே நம்ம அணியில் தான் ஒரு உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்!

ஏனெனில் சில சமயம் தளபதியாரின் ஸ்டேடஸ்களைப் பார்த்தால் அவர் நம்மை விட எதிரியை அதிகமாக கலாய்த்து விட்டாரே... அவரே கலாய்க்கும் போது நாம இன்னும் கொஞ்சம் டோஸ் ஏத்தலாமோங்கற அளவிற்கு நம்மில் போட்டியிருக்கிறது...! ஆகவே தலைவர் கலைஞர், தளபதியார் உள்ளிட்ட நாம் அனைவரும் இருப்பது, திமுகழகத்தின் பொறுப்பற்றவர்கள் அணி! இந்த பொறுப்பில்லாதோர் அணியைக் கண்டு திமுகழகத்தின் பொறுப்பில் இருப்பவர் அனைவரும் சற்றே பயபக்தியோடு விலகித்தான் செல்ல வேண்டும்.

ராஜாகுப்பம் முருகானந்தம் (வேலூர் மாவட்டம்)

திமுகவில் இருக்கும் அணிகளுக்கு வயது வரம்பு என்றால் அது ஒன்று இளைஞர் அணி, இன்னொன்று இணைய அணி! இது நல்ல தேர்வு என்று தான் கூறுவேன். காரணம், இணையம் இப்போது வெறும் விளம்பரத்திற்காக இயங்குவது போல ஆகிவிட்டது.

அன்றைய காலகட்டத்தில் இணைய அணி என்று ஒன்று வருமா என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. மாறாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த அணியில் இடம்பிடிக்க பலர் தங்களை முன்னிலைப்படுத்தியதை யாரும் மறுக்க இயலாது. காரணம் என்ன என்று யூகிக்க முடியவில்லை. கழக வெறியா அல்லது பதவி ஆசையா என்று ..

2014 ஆம் ஆண்டு மாவட்டத்திற்கு இருவரை நியமனம் செய்த போது எங்கள் வேலூர் மாவட்டத்தில் ஒருவர் கூட கட்சி பொறுப்பு இல்லாமல் பொதுவானவராக கிடைக்க வில்லை. அன்றைய எங்கள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் துணை அமைப்பாளர் ராஜமார்தண்டன் ஆலோசனையின் பேரின் இருவரை தேர்வு செய்து பின் இறுதில் ஒரு அட்மின் மட்டுமே போதுமானது என்று இன்றுவரை சண்முகம் என்பவர் இயங்குகிறார். இது மாவட்டத்தில் உள்ள பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அதே போல பல மாவட்ட அட்மின்கள் இயங்குகிறார்களா என்று தெரியவில்லை ?

எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால் எதுவுமே நேரத்தோடு காலத்தோடு அறிவித்திருந்தால் இப்படிபட்ட விவாதங்கள் நம் இணைய நண்பர்கள் மத்தியில் எழுந்திருக்காது. மேலும் பல மூத்த முன்னோடிகளுக்கு அப்போது வாய்ப்பும் கிடைத்திருக்கும். இன்று அதில் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அன்று இணையம் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்து வளர்ந்து வந்தது. இன்றைய இணைய நண்பர்கள் நம்மை நாமே விமர்சனம் செய்து, யார் பெரியவர் என்று வீழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எது எப்படி இருந்தாலும் இன்று நம் கழகத்தில் இளைஞர் அணிக்கு மாணவர் அணிக்கு இணையாக ஒரு அணி இருக்கும் என்றால் அது நிச்சயம் இணைய அணியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தகுதியால் சில புதியவர்களுக்கு வாய்ப்பும் சில மூத்தவருக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகிறது .

 

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment