Advertisment

மோடி அரசின் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானது - பாஜகவை சாடிய அதிமுக பொன்னையன்

கூட்டாட்சி முறையின் அடிப்படை விதிகளை மீறி ஜிஎஸ்டி பெயரில் மாநிலத்தின் வருவாயை மத்திய அரசு திருடுகிறது. பாஜக கூட்டணி கட்சியாக இருந்தாலும், அதிமுகவின் கொள்கையோடு அக்கட்சி ஒத்துபோவதில்லை என சி பொன்னையன் குற்றச்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
மோடி அரசின் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானது - பாஜகவை சாடிய அதிமுக பொன்னையன்

 Arun Janardhanan

Advertisment

பாஜகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி அமைத்து ஐந்தாண்டுகள் ஆன நிலையில், அதிமுகவிற்குள் நிலவும் பாஜகவுக்கு எதிரான குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தமிழக நலனுக்கு எதிரான கொள்கைகள் அதற்கு பின்னணியில் உள்ளது.

தமிழக நலனுக்கு எதிரான கொள்கைகள்

கடந்த செவ்வாய்க்கிழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் சி பொன்னையன், பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநில வருவாயை திருடுகிறது. மேலும் தேர்தல் தோல்விக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவை இழந்ததும், மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகள், குறிப்பாக மாணவர்களுக்கு எதிரானது தான் காரணம் என குற்றச்சாட்டினார்

பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக தலைவர்களிடையே தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இருப்பினும், பொன்னையன் உட்பட யாரும் பாஜகவை வெளிப்படையாக விமர்சித்ததில்லை.

அதிமுக கொள்கையோடு பாஜக ஒத்துபோவதில்லை

பாஜகவுக்கு எதிரான விமர்சனத்தை தொடர்ந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பொன்னையன் கூறியதாவது, பாஜகவுடனான கூட்டணி என்பது திமுகவை எதிர்கொள்வதற்கான தேர்தல் புரிந்துணர்வு. பாஜக கூட்டணி கட்சியாக இருந்தாலும், அதிமுகவின் கொள்கையோடு அக்கட்சி ஒத்துபோவதில்லை. பல விஷயங்களில் அவர்களுடன் நாங்கள் உடன்படவில்லை. நாங்களும் இந்தி திணிப்புக்கு எதிரானவர்கள் தான். அவர்களது மொழி கொள்கையை ஆதரிப்பது கிடையாது. ராஜபக்சேக்களுக்கு மோடி அரசு அளித்த ஆதரவு தவறானது. அதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர்களை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்.

நீட் தமிழக மாணவர்களுக்கு எதிரானது

அதிமுகவும் நீட் தேர்வை எதிர்க்கிறது. சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகம் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையான நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது. நீட் வந்ததில் இருந்து, மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் வட மாநில மாணவர்கள் சேர்வது அதிகரித்துள்ளது. இது தமிழக மாணவர்களிடையே மருத்துவம் பயில்வதன் ஆசையை குறைத்திருப்பதை காண முடிகிறது என்றார்.

மாநில வருவாயை திருடும் பாஜக

மேலும் பேசிய அவர், கூட்டாட்சி முறையின் அடிப்படை விதிகளை மீறி ஜிஎஸ்டி பெயரில் மாநிலத்தின் வருவாயை மத்திய அரசு திருடுகிறது. இந்த மையப்படுத்தப்பட்ட நிர்வாக பாணியை வெறுக்கிறோம். இந்த விவகாரங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான பொன்னையன் குற்றச்சாட்டுகளை பார்கையில், அடுத்து வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துவிடுமோ என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணி தொடருமா?

தொடர்ந்து பேசிய பொன்னையன் , பாஜக கூட்டணி சிறுபான்மை சமூக வாக்காளர்களை ஒதுக்கியது என்பது 100 சதவீதம் உண்மை. சமீபத்திய தேர்தல்களில் சிறுபான்மையினர் எங்களுக்கு எதிராக வாக்களித்ததற்கு இதுவே காரணம் என்றார்.

அப்போது பாஜகவுடன் கூட்டணி தொடருமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, பாமக மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிமுக போட்டியிட்டது. 234 தொகுதிகளில் பாஜக நான்கு இடங்களையும், கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் 159 இடங்களை கைப்பற்றியது.

சசிகலாவை ஒதுக்கியது ஏன்?

தொடர்ந்து, சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கீறிர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், சசிகலாவின் அலட்சியமே, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. சசிகலாவுடனான உறவை முறித்துக் கொள்ள இதுவே முக்கியக் காரணம் என்றார்.

ஒருவேளை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சசிகலாவை விடுவித்துவிட்டால் என்கிற கேள்விக்கு, தீர்ப்புக்கு பிறகு அதை பார்ப்போம் என தெரிவித்துவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment