எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை கண்டிக்கத்தக்கது; சட்டரீதியாக சந்திப்போம்: இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை

Tamil News Update, : கழக முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tamil News Aiadmk : கழக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம், மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்த போது சுமார் 800 கோடிக்கு அதிகமான ஒப்பந்த பணிகளில் ஊழல் செய்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சென்னை திண்டுக்கல், கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவடங்களில் அவருக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் அவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் இருந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறையினருடன் வருமானவரித்துறையிரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து கோவையில் வேலுமணி வீட்டில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இது தொடர்பாக சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ்பி வேலுமனியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா, முன்னாள் அமைச்சர் திரு . S.P. வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் , அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒருசிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறேதா என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன. துடிப்பான கழக செயல்வீரர் திரு . S.P. வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.

இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும், அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk condemnation statement for sp velumani issue

Next Story
அப்பல்லோவில் பாரதி பாஸ்கர்; உடல்நிலை குறித்த முக்கிய தகவல்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com