Advertisment

டெங்குவை விட கொடுமையான இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்: டிடிவி தினகரன்

டெங்குவை விட கொடுமையான இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dinakaran, CM Edappadi Palanisamy, AIADMK, O Panneer selvam, Sasikala,

டெங்குவை விட கொடுமையான இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டெங்குவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை பற்றி கவலைபடாமல் பதவியை காப்பாற்ற  தற்போதைய ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர் என்றார்.  சென்னை அடையாரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது: 2 நாட்களில் ஆட்சி கலையும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும்.

Advertisment

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் நாள் குறித்தால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும். ஏற்கெனவே 21 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இல்லை. இன்னும் பல எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் இருக்கின்றனர் என்பதனை கருத்தில் கொண்டு மு.க ஸ்டாலின் அவ்வாறு பேசியிருக்கலாம்.

சசிகலா கை காட்டியதனால் தான் முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்கின்றார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் இணைந்து தற்போதைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள் என்பது தான் உண்மை.

நடராஜனின் உடல் நிலை

நடராஜனுக்கு கல்லீரல் மாற்ற வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம், விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கோரியுள்ளோம். எத்தனை நாட்கள் பரோல் வழங்கப்படும் என தெரியவில்லை.

தட்டிக் கழித்த பொறுப்பு ஆளுநர்

தமிழகத்தின் அரசியல் சூழலை கருத்தில் கொள்ளாமல், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தட்டிக் கழித்துவிட்டார். மத்திய அரசுக்கு இதனால் கெட்டப் பெயர் வந்துவிட்டது என்று தெரிந்ததனால் தான், உடனடியாக ஆளுநரை நியமனம் செய்திருப்பார்கள் என கருதுகிறேன். தற்பேதைய ஆட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பது உலகிற்கே தெரியும். எனவே, புதிய ஆளுநர் நடுநிலை வகிப்பார் என நம்புகிறேன்.

எடப்பாடி பழனிசாமி வீரத்தமிழரா?

Employement, tamilnadu government

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்” என்பதைப் போல தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி வீரத் தமிழராக இருந்திந்தால், அமைச்சரவையை கலைத்து விட்டு மீண்டும் முதலமைச்சராக வரட்டும். அவ்வாறு செய்தால் நாங்கள் எங்களது வீட்டிலே எங்களது வேலையை பார்த்துக் கொண்டு இருந்து விடுகிறோம். அதற்கு கூட எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.

வீட்டுக்கு அனுப்புவோம்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்பது தற்காலிகமானது தான். இதனை விரைவிலே நாங்கள் முறியடித்து, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

டெங்குவை விட கொடுமையானவர்கள்

டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்தால் என்ன?  அவர்களைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற வரையில் ஆட்சியில் இருந்தால் போதும். தமிழகத்தை தற்போது ஆள்பவர்கள் டெங்குவை விட கொடுமையானவர்கள். மக்களுக்கு ஆபத்தவர்கள். டெங்கு எப்படி கட்டுப்படுத்தப்பட வேண்டுமோ, அதேபோல இவர்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஜெயலலிதா இல்லாத நிலையில், தற்போது புலிகேசி போல செயல்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment