Advertisment

முதல்வருடன் அடுத்தடுத்த சந்திப்புகள்; அதிமுகவில் அதிகரிக்கும் சஸ்பென்ஸ்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அமைச்சர்கள் அடுத்தடுத்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து வருவதால் அதிமுகவில் சஸ்பென்ஸ் அதிகரித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
cm edappadi k palaniswami meets minister sengottaiyan, cm edappadi k palaniswami meets rajendra balaji, அதிமுக, முதல்வர் பழனிசாமி, முதல்வர் வேட்பாளர் யார், அமைச்சர்கள் சந்திப்பு, cm edappadi k palaniswami meets chennai police commissoner, tamil nadu, aiadmk, who is cm candidate in aiadmk, eps, ops

திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7-ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து அறிவிப்பார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்த நிலையில், முதல்வர் பழனிசாமியை அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவதால் அதிமுகவில் சஸ்பென்ஸ் அதிகரித்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால், முதல்வர் பழனிசாமி தனது ஆதரவு அமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் அனைவரும் அக்டோபர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். அதே போல, அமைச்சர் செங்கோட்டையனும் முதலமைச்சர் இல்லத்துக்கு சென்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தார்.

அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்தபோது என்ன பேசினார்கள், என்ன ஆலோசனை நடத்தப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதன் பிறகு, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு சென்று சந்தித்தார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் முதல்வரை சந்தித்து என்ன ஆலோசனை நடத்தினார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அமைச்சர்கள் அடுத்தடுத்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து வருவதால் அதிமுகவில் சஸ்பென்ஸ் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை மாலை கிண்டி ராஜ்பவனில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Edappadi K Palaniswami Minister K T Rajendra Balaji Minister K A Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment