அதிமுக எம்எல்ஏ பழனி மனைவி – மகளுக்கும் கொரோனா: தீவிர சிகிச்சை
அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுவருகிறது.
அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுவருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 லட்சத்துக்கு மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மகாராஷ்டிரா, டெல்லி தமிழ்நாடு இந்த 3 மாநிலங்களில் மட்டும் 60 சதவீத கொரோனா தொற்று நோயாளிகள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் முன்களப் பணியாளர்களும் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றதொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ பழனியின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“