Advertisment

தொடர்ந்து 2 மணி நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம்.. 5 முக்கிய தீர்மானத்துடன் முடித்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்காததால், அவர்கள் 3 பேருமே இதில் பங்கேற்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk meeting

aiadmk meeting

aiadmk meeting : அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று (12.6.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என  ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 முக்கிய தீர்மானத்துடன் ஆலோசனை கூட்டத்தை  முடித்து வைத்துள்ளனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்.

Advertisment

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியிலும், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட 22 இடங்களில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை .ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.

இதையடுத்து, கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.இந்த சூழலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில்,இன்று (ஜூன் 12-ஆம் தேதி) காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க வேண்டும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகள் மத்தியில் மேலூங்கி இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதே போல் ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை ஆரம்பித்து வைத்த ராஜன் செல்லப்பாவும் இதில் கலந்து கொண்டார்.அதே நேரம், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்காததால், அவர்கள் 3 பேருமே இதில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்றும் கூட்டத்தில் உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி, சிறப்புடன் பணியாற்றுமாறு, மற்றொரு தீர்மானம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதிமுக தொடர்ந்து மக்களை நலப்பணிகளில் ஈடுபட உறுதியேற்பதாகவும், ஆலோசனை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள

குறிப்பாக அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே செல்வதை தடுக்க அதிமுக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது. அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை குறித்து எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை என்றார்.

அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள் முழு விபரம்:

1. உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்க தீர்மானம்.உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்த கூட்டம் சூளுரைக்கிறது.உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றிய அதிமுக தலைமையில் வெற்றி பெற்றதை போன்ற மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது.

2. நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக்கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

3. மக்களவை பொதுத் தேர்தல், மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கும், கழக தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும், வாக்களித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

4. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.தமிழக மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது.

5. பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவுக்கு வழங்கியதற்கு பாஜகவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் .

ஊடகங்களில் கருத்து சொல்ல தடை: அதிமுக சார்பில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், ஊடகங்களில் கருத்து சொல்வது குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்தவித கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தித் தொடர்பாளர்களுக்கு உரிமையுண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment