Advertisment

அ.தி.மு.க - பா.ம.க உறவு முறிகிறது: ராமதாஸ் பேசியது என்ன?

சேலத்தில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், கூட்டணி குறித்து பேசியது அதிமுக - பாமக உறவை முறிவுக்கு கொண்டு சென்றுள்ளது. கூட்டணி உறவு முறியும் அளவுக்கு ராமதாஸ் அப்படி என்ன பேசினார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK - PMK alliance broken because of Dr Ramadoss speech, AIADMK, ADMK, PMK, Dr Ramadoss, AIADMK - PMK relations boken, அதிமுக - பாமக உறவு முறிகிறது, ராமதாஸ் பேச்சு, அதிமுக பாமக கூட்டணி உடைந்தது, எடப்பாடி பழனிசாமி, edappadi palaniswami, dr ramadoss criticise alliance of admk

சேலத்தில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கூட்டணி தர்மமெல்லாம் அதர்மமாகிவிட்டது அதனால் பாமக வெறும் 5 இடங்களில் போட்டியிட்டது என்று கூட்டணி கட்சியான அதிமுகவை சாடினார். ராமதாஸின் இந்த பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதிமுக கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவில்லை என்று ராமதாஸ் பேசியதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு இருவரும் மறுப்பு தெரிவித்து பதிலளித்தனர். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் ராமதாஸுக்கு கடுமையாக பதிலளித்துள்ளதால் அதிமுக - பாமக கூட்டணி முறிகிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

சேலத்தில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொடர்ந்து தனித்து போடியிட்டிருந்தால் ஆட்சியக் கைப்பற்றி இருக்கலாம், ஆனால், சிலர் கூறியதன் பேரில் கூட்டணி அமைத்து தோற்றோம். தேர்தலில் கூட்டணி என்றாலே காலை வாருவதாக இருக்கிறது. கூட்டணி தர்மமெல்லாம் அதர்மமாகிவிட்டது கடந்த தேர்தலில் 23 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், குறைந்தது 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூட்டணி கட்சியான அதிமுகவை மறைமுகமாகச் சாடியிருந்தார். ராமதாஸின் இந்த பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

டாக்டர் ராமதாஸின் பேச்சுக்கு பதிலளித்த அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் ஊடகங்களிடம் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் யார் காலையும் வாரிவிடுவதில்லை. வஞ்சம் என்றால் எங்களுக்கு தெரியாது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கூட்டணி தர்மத்தை முறையாகக் கடைபிடிக்கிறோம். அதனால், அவர் சொல்வது எங்களுக்கு பொருந்தாது” என்று கூறினார்.

அதே போல, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஊடகங்களிடம் கூறுகையில், “பொதுவாக அவர்கள் (பாமக) கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்கள். விலகிய பிறகு அவர்கள், ஆயிரம் கருத்துகள் பரிமாறுவார்கள். அதற்கெல்லாம பதில் சொல்ல முடியுமா? கூட்டணியில் இருந்து விலக்விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். விலகிய பிறகு அவர்கள் சொல்லும் கருத்துக்கு பதில் கேட்டால் எப்படி சொல்வது. இதை எங்கள் தலைவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

டாக்டர் ராமதாஸின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு பதில் அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக - பாமகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி துரோகம் செய்துவிட்டது என்று கூறினால் என்ன துரோகம் என்று அவரிடம் கேளுங்கள். என்ன துரோகம் என்று சொன்னால்தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல முடியும்.” என்று கூறினார்.

பாமக வெற்றியைத் தடுத்துவிட்டதாக ராமதாஸ் கூறியது குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, மக்கள் தான் ஓட்டு போட வேண்டும். நீங்ளோ நானோ ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க முடியாது. தற்போது பாமக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டணி தாவுவது பாமகவின் வாடிக்கை” என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.

பாமக கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பாமக வலுவாக இருக்கும் வட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த பாமக 47 இடங்கள் வெற்றி பெற முடிந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோதே கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனாலும், அதிகாரப் பூர்வமாக அதை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான், டாக்டர் ராமதாஸ், பாமக தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தாலே ஆட்சியைப் பிடித்திருக்கும். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில், 23 இடங்களில் போட்டியிட்டு குறைந்த பட்சம் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 5 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி தர்மம் அதர்மமாகிவிட்டது என்று அதிமுகவை விமர்சித்தார்.

டாக்டர் ராமதாஸின் பேச்சு அதிமுக பாமக கூட்டணியை வெளிப்படையாக முறிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். டாக்டர் ராமதாஸின் விமர்சனம் குறித்து ஊடகங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒருபடி மேலே சென்று தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டணி தாவுவது பாமகவின் வாடிக்கை என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளார். இருவரின் இந்த பேச்சு அதிமுக - பாமக கூட்டணி உறவு முறிந்துவிட்டதையே காட்டுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Edappadi K Palaniswami Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment