New Update
![annamalai sir](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/29/udUCBKSboGSgpciCnGxT.jpg)
அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘யார் அந்த சார்’ என்ற பதாகை ஏந்தி, சென்னையில் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகார் தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் போலீசார் விரைந்து செயல்பட்டு ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனக்குத் தானே சவுக்கால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஞானசேகரன் மாணவியை அச்சுறுத்தியபோது, போனில் ஒருவரிடம் பேசியதாகவும் அவரை சார் என்று குறிப்பிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன் உடன் மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளது என்றும் ஞானசேகரனால் சார் என்று குறிப்பிடப்பட்ட நபர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில்அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘யார் அந்த சார்’ என்ற பதாகை ஏந்தி, அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) மாலை அ.தி.க.வி-னர் பலர் திடீரென குவிந்தனா். அவர்கள் மாலின் உள்ளே நுழைந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, கைகளில் ‘யார் அந்த சார்’ பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினா். அ.தி.க.வி-னர் ‘யார் அந்த சார்? என்ற வாசகம் இடம் பெற்ற பதாகையை உயர்த்தி பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Politics can never be about one-upmanship on issues that affect a common man.
— K.Annamalai (@annamalai_k) December 29, 2024
Appreciate @AIADMKITWINGOFL for picking up this issue and asking an important question.#யார்_அந்த_SIR pic.twitter.com/JGDTOAurXE
இதையடுத்து, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகையுடன் போராட்டத்தில் குதித்த அ.தி.மு.க-வை பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “ஒரு சாமானியனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசியல் ஒரு போதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு அ.தி.மு.க ஐ.டி பிரிவுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.