scorecardresearch

ஒற்றைத் தலைமை பிரச்னை; பா.ஜ.க தலையீடு இல்லை: ஜெயக்குமார் உறுதி

Former minister D.Jayakumar press meet about BJP intervention in AIADMK Single Leadership Row Tamil News: அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

AIADMK Single Leadership Row, No BJP intervention Jayakumar confirms
Former AIADMK minister D.Jeyakumar

Former AIADMK minister D.Jeyakumar Tamil News: அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 23ம் தேதி) சென்னையில் உள்ள வனகரத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களால் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு பேசிய அவர் வருகிற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், இது சட்ட விரோதமானது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் சார்பில், மனோஜ் பாண்டியன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை. சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்டமுடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளிக்கமால் நீதிமன்றத்தை நாடுவது, தேர்தல் ஆணையத்தை நாடுவது போன்ற ஓ.பி.எஸ்-இன் செயல்களால் தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல். இதனால் தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவி வருகிறது. தூங்குபவரை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Aiadmk single leadership row no bjp intervention jayakumar confirms