Advertisment

EPS, CM Candidate : புதிய வரலாறு படைப்போம் - முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்

AIADMK CM Candidate News: அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
EPS, CM Candidate : புதிய வரலாறு படைப்போம் - முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்

AIADMK CM Candidate News : அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய எதிர்பார்ப்பே இன்றைய முக்கிய செய்தி. முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக சீனியர்கள் நேற்று (6-ம் தேதி) பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். மூத்த அமைச்சர்கள் பலரும் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பல கட்டமாக சந்தித்து பேசினர்.

Advertisment

இன்று காலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்’ என்றார். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

.

 

 

Live Blog

AIADMK CM Candidate Edappadi K Palaniswami: அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார்கள்.



























Highlights

    20:14 (IST)07 Oct 2020

    புதிய வரலாறு படைப்போம் - முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் -02

    முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்

    "எண்ணியது செய்திடல் வேண்டும் எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும் நீதிக்கு தலைவணங்கு நடக்கவேண்டும் நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்னும் உயரிய லட்சியங்களை உள்ளத்தில் கொண்டு புரட்சித் தலைவர் அவர்கள் தன் உதிரத்தின் ஈழத்தில் விலையுண்டு இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டன் ஆக அன்று என் அரசியல் வாழ்வைத் தொடங்கிய இந்த விவசாயி ஊர் நின்று பார்க்கும் அளவுக்கு உச்சத்துக்கு அழைத்து வந்தது நான் தினந்தோறும் பூசித்து வணங்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கனிவுக் கரங்கள்தான்." என்று தெரிவித்துள்ளார்.

    20:09 (IST)07 Oct 2020

    புதிய வரலாறு படைப்போம் - முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் - 1

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, ஆகியோரின் அன்பு தொண்டர்கள் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பான வணக்கம்

    ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

    உழவன் வீட்டில் உதித்த ஒருவனும் உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமை சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது இதற்காக் என் ஆயுளின் கடைசி வினாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.

    19:26 (IST)07 Oct 2020

    முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு நிறைவு

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவடைந்தது.

    17:50 (IST)07 Oct 2020

    அதிமுக வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில், “புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    15:53 (IST)07 Oct 2020

    வேதியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு

    2020-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த Jennifer A.Doudna (ஜெனிஃபர் ஏ டவுட்னா) என்பவருக்கும் பிரான்சைச் சேர்ந்த Emmanuelle Charpentier (இமானுவேல் சார்பென்டியர்) என்பவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

    15:47 (IST)07 Oct 2020

    5% தண்ணீரைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காத ஆலைகளை மூடவேண்டும் - உயர்நீதிமன்றம்

    நிலத்தடி நீரைச் சட்ட விரோதமாக உறிஞ்சப்படுவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி 5% தண்ணீரைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காத ஆலைகளை மூடவேண்டும் என்றுகூறி அதிரடி முடிவை அறிவித்திருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

    14:40 (IST)07 Oct 2020

    அரசியலில் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குராஜாத் மாநிலத்தின் முதலமைச்சராகக் கடந்த 2001-ம் ஆண்டு மோடி பதவியேற்றார். பிறகு, 2002, 2007 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறையும் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். 2014 மற்றும் 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு 2 முறை பிரதமரானார். இன்று தன் அரசியல் வாழ்வில் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் மோடி.

    14:18 (IST)07 Oct 2020

    பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்

    அதிமுக முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிப்பைத் தொடர்ந்து, அலுவலகத்திற்கு வெளியே உற்சாகமாய் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடியுள்ளனர். மேலும், மேளதாளங்கள் முழங்க அதற்கேற்றபடி நடனமாடியும் இனிப்புகள் பரிமாறியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    13:46 (IST)07 Oct 2020

    இன்று மாலை ஓபிஎஸ்-ஸை சந்திக்கும் இபிஎஸ்

    முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாலை துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்-ஸிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    13:35 (IST)07 Oct 2020

    ‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ புரமோஷனை தொடங்கிய அதிமுக

    முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக அடுத்த தேர்தலுக்கான புரமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டது. ‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ என்கிற புதிய கோஷத்தை அதிமுக முன்வைத்திருக்கிறது.

    இந்தப் புதிய கோஷத்துடன் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டுமே தாங்கிய கிரியேட்டிவ்களை சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களும் இதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

    13:29 (IST)07 Oct 2020

    நினைவிடங்களில் அஞ்சலி

    முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றனர்.

    11:25 (IST)07 Oct 2020

    யூகங்களுக்கு முற்றுப்புள்ளி

    இபிஎஸ்.ஸை வாழ்த்தி தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    இந்த அறிவிப்பு நிகழ்வில் வழிகாட்டும் குழு உறுப்பினர்கள் பட்டியலை இபிஎஸ்.ஸும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை ஓபிஎஸ்.ஸும் வெளியிட்டனர். இதன் மூலமாக கட்சியில் தனக்கான இணை அதிகாரத்தை இபிஎஸ் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார். வழிகாட்டும் குழுவிலும் 6-5 என இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு பங்கீடு செய்திருக்கிறது.

    இதன் மூலமாக முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் முன்னிறுத்தப்படும் பட்சத்தில், கட்சி முழுமையாக ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் செல்லும் என கிளம்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். ஓபிஎஸ் இதில் இறங்கி வந்திருக்கும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் குழுவில் 5 இடங்களை கொடுத்ததன் மூலமாக இபிஎஸ்.ஸும் அட்ஜஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்.

    11:24 (IST)07 Oct 2020

    எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என ஒருமனதாக தீர்மானம்

    தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ‘ஏற்கனவே கழக பொதுக்குழு தீர்மானப்படி வழிகாட்டும் குழு நிர்வாகிகள் பெயரை இங்கு அறிவித்திருக்கிறார்கள். அதில் இடம் பெற்ற 11 பேருக்கும் நல் வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாமானியரும் உச்ச பதவிக்கு வர முடியும் என்ற சரித்திர சகாப்தத்தை படைத்த அறிஞர் அண்ணா, தொடர்ந்து 3 முறை சரித்திர வெற்றி பெற்று நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர்., அதன்பிறகு இந்த இயக்கத்திற்கு வந்த சோதனை வேதனைகளை தாங்கி இந்த இயக்கத்தை உச்ச நிலையில் அமர்த்தினார் புரட்சித் தலைவி.

    இந்த இயக்கமும் ஆட்சியும் தொண்டர்கள் கையில் இருக்கவேண்டும் என்கிற கனவு இன்று நனவாகியிருக்கிறது. இதற்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 2021 தேர்தல் கட்சியின் முதல் அமைச்சர் வெற்றி வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’ என்றார் ஓபிஎஸ்.

    11:23 (IST)07 Oct 2020

    ‘வெற்றி வேட்பாளராக இ.பி.எஸ்.-ஐ மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’: ஓபிஎஸ்

    அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் ஓபிஎஸ் பேசியது இதுதான்... ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே, இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்களே’ என ஆரம்பித்தார் ஓபிஎஸ்.

    10:14 (IST)07 Oct 2020

    வழிகாட்டும் குழுவில் யார், யார்?

    வழிகாட்டும் குழுவில் 1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 2. அமைச்சர் தங்கமணி 3. அமைச்சர் வேலுமணி 4. அமைச்சர் ஜெயகுமார் 5. அமைச்சர் காமராஜ் 6. அமைச்சர் சி.வி.சண்முகம் 7. ஜேசிடி பிரபாகர் 8. மனோஜ் பாண்டியன் 9. மோகன் 10. கோபாலகிருஷ்ணன் 11. மாணிக்கம்

    இதில் முதல் 6 நபர்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும், அடுத்த 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும் கருதப்படுகிறது.

    10:11 (IST)07 Oct 2020

    தொண்டர்கள் ஆரவாரம்

    முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும், கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பட்டாசு வெடித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

    வழிகாட்டும் குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்கள் 6 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

    09:58 (IST)07 Oct 2020

    எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளர்- அதிகாரபூர்வ அறிவிப்பு

    அதிமுக வழிகாட்டும் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மொத்தம் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    09:53 (IST)07 Oct 2020

    அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: சற்று நேரத்தில் அறிவிப்பு

    அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது.

    முதல்வரும், துணை முதல்வரும் தலைமைக்கழகம் வந்ததும், செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது. கட்சி வழிகாட்டும் குழு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    19:10 (IST)06 Oct 2020

    முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு

    முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து வருகின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    19:09 (IST)06 Oct 2020

    முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு

    முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து வருகின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    17:07 (IST)06 Oct 2020

    வழிகாட்டும் குழுவின் அதிகாரம் என்ன?

    தற்போதைய ஆட்சி மன்றக் குழுவில் இபிஎஸ், ஓபிஎஸ், மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வளர்மதி உள்பட 9 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வழிகாட்டும் குழுவில் இடம் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடக்கின்றன.

    இன்று மாலை தொடங்கி, இரவு வெகு நேரம் வரை ஆலோசனை நடைபெறும் என்றும், நாளை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

    17:06 (IST)06 Oct 2020

    முதல்வர் வேட்பாளர் சர்ச்சை

    முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க ஓபிஎஸ் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும், ஓபிஎஸ் கோரிக்கை அடிப்படையில் வழிகாட்டும் குழு அமைக்க இபிஎஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதை அதிகாரபூர்வமாக அதிமுக தலைமை உறுதிப்படுத்தவில்லை.

    வழிகாட்டும் குழுவுக்கே அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் என பேசப்படுகிறது. அப்படியானால் ஏற்கனவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சிமன்றக் குழு கலைக்கப்படுமா? என்கிற கேள்வி இருக்கிறது.

    14:44 (IST)06 Oct 2020

    இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை துறக்கும் இபிஎஸ்?

    மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸை சந்தித்து முடித்தபிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். கட்சிக்கு வழிகாட்டும் குழு அமைப்பது குறித்தும், அதன் அதிகாரங்கள் குறித்தும், பொதுக்குழு தேதி குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதில் ஏற்படும் உடன்பாடு அடிப்படையில் நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும்.

    முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் பட்சத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற அம்சமும் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. வழிகாட்டும் குழு எடுக்கும் முடிவு அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே முடிவுகளை அறிவிக்கும் வகையில் மாற்றங்களை செய்ய ஓபிஎஸ் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

    13:37 (IST)06 Oct 2020

    இபிஎஸ் முதல்வர் வேட்பாளர்... ஓபிஎஸ் ஒப்புதல்?

    முதலமைச்சருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, காமராஜ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

    ஓபிஎஸ் வலியுறுத்தியபடி, கட்சிக்கு வழிகாட்டும் குழு அமைக்க இபிஎஸ் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.ஸை அறிவிக்க ஓபிஎஸ் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. வழிகாட்டும் குழுவின் அதிகாரங்கள் குறித்து ஆலோசனை நடப்பதாகத் தெரிகிறது.

    இதற்கிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    12:38 (IST)06 Oct 2020

    இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே விரைவில் ஒருமித்த கருத்து- அமைச்சர் ஜெயகுமார்

    இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே விரைவில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார். முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸை சந்தித்து பேசினர். அதன்பிறகு இந்தக் கருத்தை ஜெயகுமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    11:57 (IST)06 Oct 2020

    ஜரூர் பேச்சுவார்த்தைகள்; இன்று முக்கிய முடிவு?

    அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து பேசி வருகிறார்கள். முன்னதாக கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஓபிஎஸ்.ஸை சந்தித்தனர்.

    முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசி வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இன்று ஒரு முடிவை எட்டிவிடுவதில் இரு தரப்பும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

    AIADMK Tamil News: செப்டம்பர் 28-ம் தேதி செயற்குழுவிலேயே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஓபிஎஸ் தரப்பு, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு முதலில் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியது.

    இபிஎஸ் தரப்பிலோ, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பே இப்போது முக்கியம் என்றார்கள். கடைசியாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் தனியாக ஆலோசித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், ‘7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்போம்’ என்றார்கள்.

    Aiadmk O Panneerselvam Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment