Advertisment

பாஜகவுக்கு நாங்குநேரி தொகுதியை ஒதுக்குகிறதா அதிமுக? கடம்பூர் ராஜு பதில்

AIADMK will reserve Nanguner assembly constituency to BJP: இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு  பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

AIADMK will reserve Nanguneri assembly constituency to BJP: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான நாங்குநேரி தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு  பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறினார்.

Advertisment

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் மக்களவைப் பொதுத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பியாக ஆனார். அதனால், ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்ற விதியின்படி அவர் நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்துதான் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலை திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இருந்த தொகுதி என்பதால் அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும்கட்சியான அதிமுக அதன் கூட்டணி கட்சியும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், நாங்குநேரி பாஜகவுக்கு ஒதுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ “

நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும். தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சி, திமுக எதிர்க்கட்சி என 2 கட்சிகளைத் தான் மக்கள் அங்கீகரித்துள்ளனர். அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கமல் தற்போது வெளியேற தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகும் போது அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையாவது தான் ஊழல். படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் எதை எதையோ பேசுகின்றனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் 3 தீபாவளிகளுக்கு ஓடியது; அந்த சாதனையை எந்த நடிகரும் முறியடிக்கவில்லை” என்று கூறினார்.

Bjp Aiadmk Minister Kadambur Raju
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment