Advertisment

திண்டுக்கல் – சென்னை பாதயாத்திரை; பெண்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து முதல்வரிடம் மாதர் சங்கம் விளக்கம்

திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்ட மாதர் சங்கம், பெண்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து முதல்வரிடம் விளக்கம் அளித்தனர்

author-image
WebDesk
New Update
சந்திக்க விடாமல் தடுத்ததாக போலீஸ் மீது குற்றச்சாட்டு; பாலபாரதியிடம் போனில் விசாரித்த ஸ்டாலின்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜனவரி மாதம் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு 'பாதயாத்திரை' மேற்கொண்டு மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் விளக்கமளித்தனர்.

Advertisment

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமானது (AIDWA), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையது. இந்த அமைப்பு மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக ஜனவரி மாதம் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு 'பாதயாத்திரை' மேற்கொண்டு இந்த பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தனர்.

AIDWA தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற வழக்குகளில் அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் கூறினார்.

நீதிமன்றங்கள் கூட ஜாமீன் வழங்குவதில் மெத்தனமாக இருப்பதால், குற்றவாளிகள் அதிக துணிச்சலுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று பாலபாரதி கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 500 தாக்குதல் மற்றும் பாலியல் மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பாலபாரதி சுட்டிக்காட்டினார். 187 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் உள்ளனர் அல்லது வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் அருகே பாச்சலூரில் 12 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை உதாரணம் காட்டி, குற்றவாளிகளை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்று பாலபாரதி கூறினார். AIDWA மற்றும் பிற அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கிய பிறகுதான், இந்த வழக்கில் சிபி-சிஐடி விசாரணைக்கு மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்ததாக பாலபாரதி கூறினார்.

பல பெண்கள் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மௌனம் காத்து வருவதாகவும், பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த பிறகும், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்புகிறார்கள் அல்லது வழக்குகளை விசாரிப்பதில் சரியாக செயல்படவில்லை என்றும் பாலபாரதி கூறினார்.

பெண்கள் நட்பு மனப்பான்மையின் அவசியத்தை காவல்துறை சரியாக உணர வேண்டும் என்று கூறிய பாலபாரதி, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் சகாப்தத்தில் கூட, பெண்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்காதது கவலைக்குரியதாக உள்ளது என்றும் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Mla Balabharathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment