Advertisment

தமிழகத்தில் மரணிக்கும் மது நோயாளிகள்: தீர்வு என்ன?

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், மது போதைக்கு அடிமையானவர்கள் மது இல்லாமல் போதைக்காக வேறு ரசாயனங்களை குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மது கிடைக்காததால் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தமிழக அரசுக்கு ஒரு புது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
alchohol adicts, alchohol adictions, liquor adicts attempt suicide, ஆல்கஹால், மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தற்கொலை முயற்சி, குடிநோயாளிகள் தற்கொலை முயற்சி, people seeks govt action by Centre for De-Addiction, tasmac, டாஸ்மாக், tamil nadu, coronavirus,lockdown india, கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு, lockdown tamil nadu, shut down tasmac

alchohol adicts, alchohol adictions, liquor adicts attempt suicide, ஆல்கஹால், மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தற்கொலை முயற்சி, குடிநோயாளிகள் தற்கொலை முயற்சி, people seeks govt action by Centre for De-Addiction, tasmac, டாஸ்மாக், tamil nadu, coronavirus,lockdown india, கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு, lockdown tamil nadu, shut down tasmac

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், மது போதைக்கு அடிமையானவர்கள் மது இல்லாமல் போதைக்காக வேறு ரசாயனங்களை குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மது கிடைக்காததால் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தமிழக அரசுக்கு ஒரு புது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

Advertisment

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர, மால்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், மது கிடைக்காமல், கை கால் நடுக்கம், பதற்றம், ஒவ்வாமை ஏற்பட்டு மதுவைத் தேடி அலைந்து வருகின்றனர். சிலர், போதைக்காக, மாற்றுவழியாக ரசாயணங்களையும் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே சிவசங்கர், பிரதீப், சிவராமன் ஆகிய 3 இளைஞர்களும் மது கிடைக்காததால் போதைக்காக பெயிண்ட் உடன் கலந்த வார்னிஷ் குடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேர் மது கிடைக்காததால், போதைக்காக ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்ததால் பாதிக்கப்படு உயிரிழந்தனர். இப்படி, தமிழகத்தில் மது கிடைக்காமல் மதுபோதைக்காக மாற்றாக வேறு வழிகளை நாடி உயிரிழப்புகள் நடப்பது ஒருபுறம் என்றால், மது கிடைக்காததால் ஏற்படும் நடுக்கம், தலைவலி பதட்டம் போன்றவற்றால் தற்கொலை முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் மது பானங்களை கள்ளச்சந்தையில் இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். சிலர், இந்த ஊரடங்கு காலத்தில் சாராயம் காய்ச்சவும் செய்து வருகின்றனர். அவர்களைக் கண்டிபிடுத்து போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

அதே போல, தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பங்களும் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்க, டாஸ்மாக் நிர்வாகம், கடைகளில் உள்ள மதுபானங்களை எடுத்து மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மொத்தமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

ஊரடங்கால் மது கிடைக்காததால் ஏற்பட்ட மனம் மற்றும் உடல்நலப் பிரச்னையால் திருவொற்றியூரைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர், தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த துயரச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி ஓய்வதற்குள், ஆவடி அருகே பட்டாபிராமைச் சேர்ந்த மணவாளன் என்பவர் மது கேட்டு இரண்டு முறை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். பிறகு தீயணைப்பு படையினர் வந்து அவரை மீட்டுள்ளனர். மது போதைக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இவையெல்லாம், தமிழக ஆண்கள் எந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் ஏற்படும் நடுக்கம், ஓவ்வாமை, தலைவலி உளப் பிரச்னைகளுக்காக சிலர் மது போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களுக்கு சிகிச்சைக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

இதனால், தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் உள்ள மது போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுவாழ்வு மையங்களை முடுக்கிவிட்டுள்ளது. மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கடந்த சில நாட்களாக சிகிச்சைக்கு வருவது அதிகரித்து வருகிறது. ஒரு சிகிச்சை மையத்துக்கு ஒரு நாளில் சராசரியாக 5 பேராவது வருவது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மதுபோதைக்கு அடிமையானவர்களை சமூகம் குடிகாரர்கள் என்று இழிவாக பார்க்கும்போது, மருத்துவத்துறையினரும் மனநல மருத்துவர்களும் மது போதைக்கு அடிமையாவது ஒரு நோய் என்று கருதி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.

நேற்று முன் தினம் ஊடங்களில் பேசிய அமைச்சர் தங்கமணி ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று கூறியுள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தை மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது பலருக்கு சிக்கலாக இருப்பதைப் பார்ப்பதாக என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மதுப்பழக்கத்தை விட முடியாமல் பலரும் சிக்கலில் உள்ளனர். மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு, காதுக்குள் கேட்கும் பிரமைகள் போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கும் குடிநோயாளிகளும் உள்ளனர். மது அருத்துவதால் பலர் உளவியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு மனநிலைக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதுபோல, மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் சந்திப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த குடிநோயால் பெரும்பாலும் சமூகத்தில் அடித்தட்டு மற்றும் நடுத்தர பிரிவுகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்படுகின்றனர். “ஆரம்பத்தில், மதுப்பழக்கத்தை விட வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மது அருந்தாததால், சிலருக்கு நடுக்கம், நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். அவர்கள் தூங்க முடியாமல் மருத்துவ உதவி தேவை என்ற நிலையை அடைவார்கள். அவர்களுக்கு IV திரவங்கள் மற்றும் மயக்க மருந்துகள் தேவைப்படும். மதுவுக்கு முற்றிலும் அடிமையாக இருப்பவர்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்” என்றும் மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டும் அதே அளவுக்கு, தமிழகத்தில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ள குடிநோயாளிகளை தற்கொலை முயற்சியிலிருந்து மீட்க திவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coronavirus Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment