Advertisment

தண்டனை முதல் ராஜினாமா வரை: பதவி இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி

TN Sports Minister Balakrishna Reddy Sentenced to 3 Years Imprisonment: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை. பதவியை ராஜினாமா செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Balakrishna Reddy, பாலகிருஷ்ணா ரெட்டி

Balakrishna Reddy, பாலகிருஷ்ணா ரெட்டி

Tamil Nadu Sports Minister Balakrishna Reddy Imprisonment: பேருந்துகள் மீது கல் வீசி தாக்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பின் விளைவாக அவர் பதவி விலகும் கட்டாயமும் ஏற்பட்டது.

பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் நடந்தது என்ன:

  • கடந்த 1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே நடந்த மோதலில் போலீஸ் ஜீப் கொளுத்தபட்டது. அது மட்டுமல்லாமல் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போதே சுமார் 5 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்படுத்தப்பட்டது.
  • இதில் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் பாலகிருஷ்ணா ரெட்டியும் இடம்பெற்றார்.
  • அதன் பின்னர் 2001ம் ஆண்டு இவர் அதிமுக-வில் இணைந்தார்.படிப்படியாக ஒசூர் நகராட்சி தலைவர், ஒசூர் ஒன்றிய செயலாளர். பின் ஒசூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என அதிமுகவில் உயர்ந்தார்.
  • இவர் மீதான வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் தான் நடைபெற்று வந்தது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்த காரணத்தால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
  • இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கின் விசாரணை எப்படியும் தன் பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது சொந்த காரில் நீதிமன்றம் வளாகத்திற்கு வந்தார்.
  • அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் காயத்ரி ஆஜராகி வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதி சாந்தி அறிவித்தார்.
  • சரியாக 3 மணியளவில் நீதிபதி தீர்ப்பு வாசித்தார். அதில் இவருக்கு எதிராக தீர்ப்பு வாசித்தப்போது அதிர்ச்சியடைந்தார்.
  • அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை பாலகிருஷ்ணரெட்டி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரிநிதித்துவ சட்டத்தின் படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார்.
  • இந்த தீர்ப்பின் வாசிப்புக்கு பிறகு நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு நேராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றார்.
  • பின்னர், இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வீட்டில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு வழக்கறிஞர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
  • இந்த தீர்ப்புக்கு பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனது டுவிட்டர் பக்கம் மூலம் அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள்" மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை உடனே அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யவேண்டும்" உயர்கல்வித்துறை செயலாளரை பணியிலிருந்து விடுவித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
  • பின்னர் அரசு சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், பாலகிருஷ்ணா ரெட்டியை பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.
  • அதன் பிறகு நேற்று இரவு, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் வாயிலாக அவர் அனுப்பியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
  • இவரின் ராஜினாமாவை தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டது. அக்கடிதத்தில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமாவை ஏற்பதாகவும், அவரின் தகுதி இழப்பை முன்னிட்டு, அவர் வகித்து வந்த இலாகாக்களை வேறு அமைச்சருக்கு வழங்குவது குறித்த குறிப்பிடப்பட்டிருந்தது.
  • பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து அவர் பதவியை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா ரெட்டி வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பை,  பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment