சென்னையில் அமித்ஷா நிகழ்ச்சி ஹைலைட்ஸ்: கூட்டணி உறுதி; பரஸ்பர பாராட்டு

அதிமுக- பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.

By: Nov 22, 2020, 7:46:11 AM

Amit Sha News Updates: பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பாஜக தலைவர்கள் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். இந்த சந்திப்பில், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில், ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அவர், கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அவர், அங்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 2021 தேர்தல் குறித்த முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Home Minister Amit Shah Chennai Visit :  உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த இணைப்பில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். 
21:53 (IST)21 Nov 2020
அமித் ஷாவின் 2016 வருட நிலைப்பாடை சுட்டிகாட்டிய கார்த்திக் சிதம்பரம்

21:15 (IST)21 Nov 2020
சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

21:01 (IST)21 Nov 2020
கண்டிகை நீர்த்தேக்கம் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

20:28 (IST)21 Nov 2020
நதிகள் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி கடிதம்

காவிரி - குண்டாறு, கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் நடந்தாய்வாழி காவிரி திட்டத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி கடிதம் அளித்துள்ளார்.

19:01 (IST)21 Nov 2020
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

பாஜக ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்துப் பேசினார்.

18:30 (IST)21 Nov 2020
தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் தமிழகம் வந்துள்ளதால் அரசியல் பேசுகிறேன். தமிழகத்தில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழல், குடும்ப அரசியல், சாதி அரசியல் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி அகற்றப்படும். 2ஜி ஊழலில் தொடர்புடைய திமுக ஊழலைப் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் மீதான் ஊழல் புகார்களை பார்த்துவிட்டு பிறகு ஊழல் புகார்களை சொல்லுங்கள். என்று கூறினார்.

18:21 (IST)21 Nov 2020
காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது திமுக தமிழகத்துக்கு செய்தது என்ன? மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி

மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி: திமுக தலைவர்கள் அடிக்கடி மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தீங்கு செய்வதாகக் கூறுவது கூறுகிறார்கள். 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று பட்டியல் தர முடியுமா? மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியைவிட இரு மடங்கு நிதி தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

18:15 (IST)21 Nov 2020
2022க்குள் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படும். இதிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

18:11 (IST)21 Nov 2020
தமிழ்நாடு அனைத்து திட்டங்களிலும் முன்னணி வகிக்கிறது - அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர்: நாடு முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நீலப்புரட்சியிலும் தமிழகம் இந்தியாவின் முன்னொடி மாநிலமாக உள்ளது என்று கூறினார்.

18:04 (IST)21 Nov 2020
வேளாண் சட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததால் விவசாயிகள் மேலும் முன்னேறுவார்கள் - அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: தமிழகத்தில் வேலூர், கரூர் மாவட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. புதிய வேளாண் சட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததன் மூலம் விவசாயிகள் மேலும் முன்னேறுவார்கள்.

18:02 (IST)21 Nov 2020
தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - அமித்ஷா பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு: சுதந்திரப் போராட்டத்தில் தமிழகர்களின் பங்கு மிகப்பெரியது. சிறப்பான நிர்வாகத்தில் இந்த ஆண்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் தமிழகம் சிறப்பாக கையாண்டது

17:56 (IST)21 Nov 2020
இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்திய நாகரீகங்களில் பழமையானது தமிழக நாகரிகம். உலகில் தொன்மையான மொழி தமிழ். அந்த தொன்மையான மொழியில் என்னால் பேச முடியாது. ஏனென்றால் எனக்கு தமிழ் தெரியாது. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ” என்று கூறினார்.

17:48 (IST)21 Nov 2020
நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: தமிழகத்தின் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய அளவிலே தமிழக அரசு பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது என்று கூறினார்.

17:43 (IST)21 Nov 2020
சென்னையின் நீர்த்தேவையை தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டம் பூர்த்தி செய்யும் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு மத்திய அரசின் விருதை பெற்றது. சென்னையின் நீர்த்தேவையை தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டம் பூர்த்தி செய்யும்” என்று கூறினார்.

17:36 (IST)21 Nov 2020
இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - முதல்வர் பழனிசாமி

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றும் முதல்வர் பழனிசாமி, இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 3 அண்டுகளில் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி செலவிடப்பட்டுளது. என்று கூறினார்.

17:29 (IST)21 Nov 2020
வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்போம் - ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர் செல்வம்: நாட்டிலேயே நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வருகிற நட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்போம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்” என்று கூறினார்.

17:25 (IST)21 Nov 2020
விழாவில் பங்கேற்றவர்களை வரவேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்புரை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். விழாவில் பங்கேற்றவர்களை வரவேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றி வருகிறார்.

17:21 (IST)21 Nov 2020
சென்னையில் மெட்ரோ ரயில் பணியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா

ரூ.61,843 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணியைத் தொடங்கிவைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

17:06 (IST)21 Nov 2020
தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்க்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்புள்ள நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

15:56 (IST)21 Nov 2020
‘தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே’ - அமித்ஷா தமிழில் ட்வீட்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

15:01 (IST)21 Nov 2020
‘அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை’ - அமித்ஷா ட்வீட்

சென்னை வருகை தந்த அமித்ஷாவுக்கு வழி நெடுக பாஜக தொண்டர்கள், அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக தொண்டர்களைப் பார்த்து காரைவிட்டு கிழே இறங்கிய அமித்ஷா நடந்து சென்றபடி கை அவர்களுக்கு கை அசைத்தார். பின்னர், எப்போது தான் சென்னைக்கு வருவது மகிழ்ச்சியானது. இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.

14:12 (IST)21 Nov 2020
பாஜக தொண்டர்களைப் பார்த்து காரை விட்டு இறங்கிய அமித்ஷா

சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பாஜக தொண்டர்கள் வழிநெடுக செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்துக்கு வெளியே பாஜக தொண்டர்களைப் பார்த்த அமித்ஷா காரை விட்டு இறங்கி நடந்து சென்று கை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

13:51 (IST)21 Nov 2020
உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்; உற்சாக வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் 2 நாள் பயணமாக சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் ஆகியோர் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.

13:46 (IST)21 Nov 2020
அமித்ஷாவை வரவேற்க ஓ.பி.எஸ், எல்.முருகன் விமான நிலையம் வருகை

சென்னை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்கள்.

13:39 (IST)21 Nov 2020
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க விமான நிலையம் வந்தார் முதல்வர் பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். அவரை வரவேற்க முதல்வர் பழனிசாமி சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

12:30 (IST)21 Nov 2020
அமித்ஷாவை வரவேற்று குஷ்பு ட்வீட்
11:31 (IST)21 Nov 2020
அமித்ஷாவை சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை லீலா பேலஸில் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி. அப்போது கூட்டணி பேச்சுவார்த்தை, 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

11:21 (IST)21 Nov 2020
அமித்ஷாவின் நிகழ்ச்சிகள்

டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அமித்ஷா, மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். ஓட்டலில் ஓய்வெடுத்து விட்டு, மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார்.

10:38 (IST)21 Nov 2020
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காத தமிழக அரசு

நாடு முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அமித்ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாஜக நிர்வாகிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் தமிழக அரசோ எந்த அனுமதியையும் நேற்று வரை தரவில்லை. ஆனாலும் வரவேற்புக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். 

09:56 (IST)21 Nov 2020
பாதுகாப்பு விபரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி சென்னை விமான நிலையம், நட்சத்திர விடுதி, கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 16 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

09:20 (IST)21 Nov 2020
தமிழக வருகை குறித்து அமித்ஷா ட்வீட்
09:18 (IST)21 Nov 2020
அமித்ஷா சென்னை வருகை

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் அவர், காணொலி மூலம் பலதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்துகிறார்.

Tamil News: விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். அதோடு விழாவில் பேருரையும் ஆற்றுகிறார்.

Web Title:Amit sha news live home minister and bjp leader amit shah chennai visit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X