Advertisment

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5-வது ஏரி: அமித்ஷா திறந்து வைக்கிறார்

அமித் ஷா தனது தமிழகப் பயணத்தின்போது 67,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

author-image
WebDesk
New Update
Amit Shah dedicate Rs 67000 Crore for chennai thervoy kandigai reservoir tamil news

Amit Shah dedicate Rs 67000 Crore for chennai thervoy kandigai reservoir

Amit Shah Chennai Visit Tamil News: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 380 கோடி மதிப்பிலான தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு, வருகிற சனிக்கிழமை அன்று தனது தமிழகப் பயணத்தின்போது 67,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

Advertisment

மேலும், ரூ.61,843 கோடி செலவிலான சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமித் ஷா அடிக்கல் நாட்டுவார் என அதிகாரப்பூர்வமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியானது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த நீர்த்தேக்கம், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணங்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம், சென்னையின் குடிநீருக்கான கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1,495 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது, நகரத்தின் ஐந்தாவது நீர்த்தேக்கமாகவும், வறட்சி போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கவும் உதவும். மேலும், நகரத்திற்கு ஒரு நாளைக்கு 65 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீரை வழங்குவதற்கு வசதியாக இருக்கும் எனவும் இந்த திட்டம் மெட்ரோவுக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒருங்கிணைந்த தண்ணீரை 1,000 mcft வரை உயர்த்தும் என்றும் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது பூண்டி, சோளவரம், ரெட்ஹில்ஸ் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு திறன் 11,257 mcft-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தைத் தவிர, கோயம்புத்தூர்-அவினாஷி உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்திற்கும், வள்ளூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பெட்ரோலிய முனையம் மற்றும் அமுல்லாயோயலில் ரூ.1400 கோடி லியூப் ஆலை ஆகியவற்றிற்கும் அடித்தளக் கற்கள் நாட்டவிருக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment