Advertisment

வந்தார் அமித்ஷா; பாஜகவினருக்கு போட்டியாக கொடிகளுடன் திரண்டு வரவேற்ற அதிமுகவினர்

தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எப்போதும் தமிழ்நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சி. அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Amit shah welcome, union minister amit shah welcome to chennai, amit shah in chenai, அமித்ஷா சென்னை வருகை, அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு, பாஜகவினர் உற்சாக வரவேற்பு, அமித்ஷா தமிழகம் வருகை, bjp cadres celebrations, bjp, chenai, amit shah warmed welcome in chennai, amit shah reception

தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எப்போதும் தமிழ்நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சி. அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனிவிமான மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பாஜக தலைவர்கள் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள், அதிமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவினர் செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க மேளதாளம் மற்றும் நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் குறிப்பிடப்பட வேண்டியது, முதல் முறையாக அதிமுகவினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக கொடிகளுடன் திரண்டு சென்று வரவேற்றனர். இது அதிமுகவினர் அமித்ஷாவை வரவேற்பதில் பாஜவுடன் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பது போல இருந்தது.

வழிநெடுக திரண்டு வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்களைப் பார்த்த அமித்ஷா, யாரும் எதிர்பாராத வகையில் காரை விட்டு கீழே இறங்கி நடந்தபடி பாஜக தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். அமித்ஷா காரில் இருந்து இறங்கி தொண்டர்களைப் பார்த்ததால் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மேலும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி சென்னையில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், நட்சத்திர விடுதி, கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 16 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கிறார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டம், ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் கோவை – அவிநாசி உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பாஜக தொண்டர்களைப் பார்த்தபின் புறப்பட்டு சென்றா அமித்ஷா, தனக்கு சென்னையில் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோவை வெளியிட்டு, எப்போதும் எனக்கு தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி. இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சென்னை என்று ட்வீட் செய்தார்.

அடுத்து தமிழில் ட்வீட் செய்த அமித்ஷா, “சென்னை வந்தடைந்தேன். தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” என்று கூறி புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bjp Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment