Advertisment

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி உறுதி - அமித்ஷா பேச்சு

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
amit shah, union minister amit shah, home minister amit shah, amit shah says speech in bjp meeting, பாஜக, அமித்ஷா, பாஜக நிர்வாகிகள் கூட்டம், தமிழ்நாடு, கடினமாக உழைத்தால் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, hard work can ensure bjo rule in tn in five years, bjp, chennai, tamil nadu, latest bjp news

சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடின உழைப்பால் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியை உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (நவம்பர் 21) சென்னை வந்து 67,378 கோட் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று உறுதி செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு நலத் திடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தபின் பேசிய அமித்ஷா தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டினார்.

அரசு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக நிர்வாகிகல் இடையே பேசிய, மத்திய அமைச்சர் அமித்ஷா, கடின உழைப்பால் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியை உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திரிபுரா, பீகார் போன்ற பல மாநிலங்களில் ஒரு பெரிய சக்தியாக இல்லாத பாஜக சொந்தமாகவோ அல்லது கூட்டணி மூலம் ஆளும் கட்சியாக உருவானதை சுட்டிக்காட்டினார் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

கட்சி உறுப்பினர்கள் அமைப்பை வலுப்படுத்த அயராது உழைத்தால், வருகிற சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கு வங்கம் தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கட்சியின் வெற்றி பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் சில தலைவர்கள், ஆளும் அதிமுகவுடனான கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவித்தபோது, கட்சி தலைமை அதை கவனித்துக்கொள்வதாக அமித்ஷா கூறியுள்ளார். “நீங்கள் கட்சி அமைப்பு மற்றும் சாவடி குழுக்களை பலப்படுத்துங்கள்” என்று அமித்ஷா கூறியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். அதில் பாஜக நிச்சயமாக கூட்டணி ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் பாஜகவையும் அதன் செயல்பாட்டையும் பலப்படுத்துவதற்கு கட்சி உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டு என்று அமித்ஷா சில யோசனைகளைத் தெரிவித்ததாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Nadu Bjp Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment