தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டரை 3 ஆண்டுகளுக்கு விற்க முடியாது!

ஜெயலலிதா பிறந்தநாளான பிப். 24ம் தேதி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், ‘அம்மா ஸ்கூட்டர்’களை, மூன்று ஆண்டுகளுக்கு விற்க தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மானிய விலையில், இருசக்கர வாகன திட்டத்தை எடப்பாடி அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி, கடந்த பிப்ரவரி 24 ஆம்  தேதி, ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று, ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை வந்த பிரதமர் மோடி இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்குய் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மானிய விலையில், இருசக்கர வாகனங்களை பெற விண்ணப்பித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், ‘அம்மா ஸ்கூட்டர்’களை, மூன்று ஆண்டுகளுக்கு விற்க தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இதன்படி, தமிழக அரசின், கிராமப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் மானிய விலை ஸ்கூட்டர் திட்ட இயக்குனர் அனுமதி இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு, வாகன உரிமையை மாற்ற முடியாது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, உறுதிப்படுத்தும் வகையில், வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும், ஆர்.சி., புத்தகத்தில், அம்மா இருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தை, மூன்றாண்டுகளுக்கு விற்கவோ, உரிமம் மாற்றமோ செய்யக்கூடாது’ என்று ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

×Close
×Close