Advertisment

மக்கள் வருகை குறைவு... உணவு இல்லாத சென்னை அம்மா உணவகங்கள்; தொடர்ந்து நடக்குமா?

சென்னையில் உள்ள 402 அம்மா உணவகங்கள் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நலத்திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amma unavagam in chennai, Ammaa canteen in Chennai, amma unavagam menu, amma unavagam near me, amma unavagam timings, amma unavagam website, amma unavagam chennai, chennai amma canteen, சென்னை அம்மா உணவகம், மக்கள் வருகை குறைவு, உணவு இல்லாத சென்னை அம்மா உணவகங்கள், சென்னை அம்மா உணவகங்கள் தொடர்ந்து நடக்குமா, amma unavagam menu and price list amma unavagam chennai, chennai Amma Unavagam in uncertain future, public visits decrease in chennai amma unavagam

சென்னையில் கடந்த சில வருடங்களாக அம்மா உணவகங்களில் உணவுகளை வாங்க வரும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னை அம்மா உணவகங்கள் உணவு இல்லாமல் இருக்கின்றன. த்தகைய அம்மா உணவகங்கள் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

சென்னையில் உள்ள 402 அம்மா உணவகங்கள் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நலத்திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை.

இதற்கு காரணம், சென்னை அம்மா உணவகங்களுக்கு நிதி ஒதுக்காதது ஒருபுறம் இருக்க, சென்னை மாநகராட்சி பட்ஜெட் அவற்றை பராமரிப்பதில் அமைதி காத்தது என்பது அம்மா உணவகங்களின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்புகிறது. இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான திட்டங்களை மாநில அரசு விளக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாதத்திற்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து சாப்பிடுவதாக இருந்த எண்ணிக்கை மாதத்துக்கு 1.5 லட்சத்துக்கும் குறைவானவர்கள் வந்து செல்வதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அம்மா உணவகங்களில் சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை சீரான அளவில் சரிவு இருந்தபோதிலும், உணவகங்களில் 4,355-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்காக ரூ. 120 கோடி ஆண்டு செலவினத்தில் 60% க்கும் அதிகமாக சம்பளமாக செல்கிறது.

சென்னையில் உள்ள சில அம்மா உணவகங்களில் ஒரு நாளைக்கு 100க்கும் குறைவான நபர்களே வருகின்றனர். ஆனால், சென்னையில் அம்மா உணவகங்கள் ஒவ்வொன்றிலும் 7 பணியாளர்கள் வரை உள்ளனர். சென்னையில் உள்ள அம்மா உணவகத்தை நடத்தும் சுயஉதவி குழுவின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 40 வாடிக்கையாளர்கள் மட்டுமே வருகிறார்கள். இந்த உணவகத்தில் காய்கறிகளை வெட்டுவதற்கும் மற்றவற்றுடன் சமைப்பதற்கும் கிட்டத்தட்ட 10 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அதனால், “தாமதமாக வருஐ தரும் போலியா வருகைப் பதிவு செய்யும் பல தொழிலாளர்கள் தேவை இல்லை. அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கும் ரேஷன் எடுத்துச் சென்றனர். 2018-19ல் இதை கேள்வி கேட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். என்னை ஆதரித்த சில சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்” என்று ஆங்கில ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில், வெறும் ரூ. 142 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல கூரைகள் உடைந்தும், செயலிழந்த மின்விசிறிகள் மற்றும் மின்விளக்குகளுடனும் உள்ளது. பலவற்றில், மேஜைகள் இல்லை. அதே நேரத்தில், சமையலறை உபகரணங்களும் இயந்திரங்களும் பழுதடைந்துள்ளன என்று அம்மா உணவக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், உணவு வகைகள் அதிகரிக்கப்படவில்லை, வருவாய் உருவாக்கம் மற்றும் கொள்முதல் மாதிரிகள் இரண்டிலும் பொறுப்புக்கூறல் இல்லை. அதிகப்படியான பணியாளர்களும் இந்த திட்டத்தின் தோல்விக்கான காரணங்களாகும். மேலும், உணவுப் பொருட்களை ஊழியர்கள் எடுத்துச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளன.

அம்மா உணவகங்களை எப்படி முறைபடுத்துவது என்ற கேள்விக்கு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அனைத்து அம்மா உணவகங்களிலும் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அம்மா உணவகங்களில் ஒவ்வொரு இட்லியும் 60 கிராம் எடையில் இருக்க வேண்டும். அம்மா உணவகங்களை சோதனை செய்து சரிபார்க்கப்பட வேண்டும். அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு வகைகளையும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், அம்மா உணவகங்களை நடத்துவதற்கு அரசிடம் ரூ. 100 கோடி கேட்டுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் அம்மா உணவகங்களைக் கண்டறிந்து, மற்றவற்றில் நடைமுறைகளை மேற்கொள்ளவும் கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மா உணவகங்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அம்மா உணவகங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும், உணவின் விலை பட்டியலைக் காட்டவு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறினார்.

அதே நேரத்தில், நவம்பர், 2020-இல் சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட மூன்று நடமாடும் அம்மா உணவகங்கள் இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. நகரின் உட்புறப் பகுதிகளில் பொதுமக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக தொற்றுநோய் பரவல் காலத்தி இந்த நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் தொடங்கப்பட்டன.

நடமாடும் அம்மா உணவகம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், இதுபோன்ற ஒரு வாகனம் சுனாமி குடியிருப்புக்கு அருகில் இயங்குகிறது. ஆனால், மோசமான ஆதரவின் காரணமாக அது நிறுத்தப்பட்டது என்று கூறினார்.

அம்மா உணவகம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பிப்ரவரி, 2013-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. அம்மா உணவகங்களில் உணவுகள் மிகவும் மலிவான விலையில் அளிக்கப்பட்டதால் இந்த அம்மா உணவகம் திட்டத்துக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலத்தின் தேவையான அனைத்து பகுதிதிகளிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில வெளிநாடுகளும் ஆய்வு செய்து சென்றன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காலத்தில் சென்னை போன்ற இடங்களில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு உணவு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. ஆனால், தற்போது, சில மாதங்களாக அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் கனிசமாக குறைந்து வருவதால் அவற்றின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி உள்ளது. அதனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Amma Canteen Amma Unavagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment