Advertisment

அம்மா வளாகம் ‘பேராசிரியர் க அன்பழகன் மாளிகை’ என பெயர் மாற்றம்; அதிமுக கண்டனம்

ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amma Valagam, Amma Valagam name changed as Perasiriyar K Anbazhagan Maaligai, Perasiriyar K Anbazhagan Maaligai, AIADMK's OPS EPS condemns MK Stalin, அம்மா வளாகம், பேராசிரியர் க அன்பழகன் மாளிகை, அம்மா வளாகம் பெயர் மாற்றம், அதிமுக கண்டனம், ஓபிஎஸ், இபிஎஸ், அதிமுக, AIADMK, cm mk stalin, ops, eps, dmk

சென்னை நந்தனத்தில் உள்ள ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க அன்பழகன் மாளிகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க. அன்பழகனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பண்பின் சிகரம் - நட்பின் இலக்கணம், நான் பெரியப்பா என்று அன்போடு அழைத்த நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டையொட்டி, நந்தனம் - ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, அவ்வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்பதற்கேற்ப விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தொட்டி குழந்தைத் திட்டம், மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிக் கணினி திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில், உணவு வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், சட்டப் போராட்டத்தின் மூலம், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பினை பெற்றுத் தந்தது என எண்ணற்றத் திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா ஜெயலலிதா.

தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அம்மாவை (ஜெயலலிதா) கௌரவிக்கும் விதத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித் துறை வளாகத்திற்கு ‘அம்மா வளாகம்’ என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.

ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களைத் திறந்து வைக்கும்போது “சென்னை - நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருஞ்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்” என்று 16.06.2020 நாளிட்ட செய்தி வெளியீடு எண் 426-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிடப்பட்ட தொலைபேசி கையேட்டில் கருவூல அலுவலகம், ஓய்வூதிய வழங்கல் அலுவலகம், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் (தெற்கு), மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கை இயக்கம், ஓய்வூதிய இயக்கம் ஆகியவற்றின் முகவரியிலும் “Ammaa Complex” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அம்மா வளாகம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் அந்த வளாகத்திற்கு ஏற்கெனவே உள்ள அம்மா வளாகம் என்ற பெயரை நீக்கிவிட்டு ‘பேராசிரியர் க. அன்பழக மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்து வந்துள்ளது.

பேராசிரியர் க. அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

பேராசிரியர் க. அன்பழகன் நிதித்துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பது நியாயமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும். இது போன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான செயல், அம்மா (ஜெயலலிதா) தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் எல்லாம் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள். வட இந்திய மாநிலத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரே தமிழினத் தலைவர் அம்மா அவர்கள். இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்ரி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Dmk Aiadmk Jayalalithaa Cm Mk Stalin K Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment