Advertisment

பிரச்சாரமே செய்யாத டிடிவி தினகரன்: அ.ம.மு.க-வுக்கு எத்தனை இடங்கள்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லாத நிலையில், 102 இடங்களில் அமமுக வெற்றி

author-image
WebDesk
New Update
TTV Dhinakaran's daughter marriage, AMMK, Sasikala, No invitation to AMMK cadres, TTV Dhinakaran, டிடிவி தினகரன் மகள் திருமணம், அமமுகவினருக்கு அழைப்பு இல்லை, அமமுக, அதிமுக, aiadmk, Sasikala, TTV Dhinakaran

AMMK getting significant victory without Dinakaran campaigning: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மொத்தம் 102 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம், அமமுக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 அன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மொத்தமாக 102 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாநகராட்சியில் 3 இடங்களிலும், நகராட்சிகளில் 33 இடங்களிலும், பேரூராட்சிகளில் 66 இடங்களிலும் அமமுக வென்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி மற்றும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பெறாத அமமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. கட்சியின் தலைவராக இருக்கும் தினகரன் பிரச்சாரத்திற்கே செல்லாத நிலையில், அமமுகவின் இந்த வெற்றி கவனம் பெறுகிறது. இதற்கு அமமுகவின் சின்னமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது

தேர்தல் வெற்றியைப் பொறுத்தவரை, மாநகராட்சிகளில் அமமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி 148 வது வார்டிலும், தஞ்சாவூர் மாநகராட்சி 36 ஆவது வார்டிலும், திருச்சி மாநகராட்சி 47 ஆவது வார்டிலும் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க, சிறுத்தைகள் சாதித்தது என்ன?

நகராட்சிகளைப் பொறுத்தவரை மொத்தம் 33 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் கள்ளக்குறிச்சியின் 9வது வார்டிலும், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் 13, 15, 24 ஆகிய வார்டுகளிலும், தேவக்கோட்டை நகராட்சியின் 4, 6, 17, 22, 23 ஆகிய வார்டுகளிலும், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியின் 21 ஆவது வார்டிலும், முசிறி நகராட்சியின் 14, 16 வார்டுகளிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியின் 23 மற்றும் 33 ஆவது வார்டுகளிலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியின் 29ஆவது வார்டிலும், தேனி மாவட்டம் அல்லி நகரம் நகராட்சியின் 7 மற்றும் 17 ஆவது வார்டுகளிலும், பெரியகுளம் நகராட்சியின் 2, 8, 20 ஆகிய வார்டுகளிலும், புதுக்கோட்டை நகராட்சியின் 11வது வார்டிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியின் 3 வார்டிலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 18 மற்றும் 28 ஆவது வார்டுகளிலும், மேலூர் நகராட்சியில் 2வது வார்டிலும், அரக்கோணம் 31வது வார்டிலும், சோளிங்கரில் 6, 19, 22,27 ஆகிய வார்டுகளிலும், இராமநாதபுரம் 4 ஆவது வார்டிலும், சாத்தூர் 22 ஆவது வார்டிலும், விருதுநகர் 6 வது வார்டிலும் என மொத்தம் 33 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

பேரூராட்சிகளைப் பொறுத்தவரை, 66 இடங்களில் வெற்றி பெற்றதோடு, தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது. ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 இடங்களில் 9 இடங்களில் அமமுக வெற்றி பெற்று, தனிப் பெரும்பாண்மை பெற்றுள்ளது.

குறிப்பிட்டத்தக்க வகையில், மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சியில் 15 ஆவது வார்டில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. அமமுக வேட்பாளர் பக்ருதீன் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல், திருப்பந்திருத்தி 6வது வார்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி 2வது வார்டு, அச்சன்புதூர் 6வது வார்டு, கீழப்பாவூர் 1வது வார்டு, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 5, 6வது வார்டுகள், வேலூர் - பள்ளிகொண்டான் 1வது வார்டு ஆகிய பேரூராட்சி இடங்களிலும் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Local Body Election Ttv Dinakaran Ammk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment