Advertisment

ரஜினியை பார்க்கச் சென்று கூட்டத்தில் பணத்தை பறிகொடுத்த ரசிகர்; போலீஸில் புகார்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த புதன் கிழமை நடிகர் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் கூட்டத்தில் தான் வைத்திருந்த ரூ.40,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த ரசிகர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Fan loses Rs 40,000, Rajinikanth Fan Balaganapathy, veteran Screen play writer Kalaignanam, , ரூ.40,000 பணத்தை பறிகொடுத்த ரஜினி ரசிகர், ரஜினி ரசிகர், மூத்த திரைக்கதை ஆசிரியர் கலைஞானம், Rajinikanth Participate, Director Bharathiraja

Rajinikanth Fan loses Rs 40,000, Rajinikanth Fan Balaganapathy, veteran Screen play writer Kalaignanam, , ரூ.40,000 பணத்தை பறிகொடுத்த ரஜினி ரசிகர், ரஜினி ரசிகர், மூத்த திரைக்கதை ஆசிரியர் கலைஞானம், Rajinikanth Participate, Director Bharathiraja

An Ardent Rajinikanth Fan loses Rs 40,000: சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த புதன் கிழமை நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை பார்க்கச் சென்ற ரஜினி ரசிகர் ஒருவர் கூட்டத்தில் தான் வைத்திருந்த ரூ.40,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த ரசிகர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலகணபதி என்பவர் வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர். கடந்த புதன் கிழமை தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.40,000 பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவருடைய நண்பர் அவருக்கு போன் செய்து கலைவாணர் அரங்கத்தில் மூத்த திரைக்கதை ஆசிரியர் கலைஞானத்துக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு நீ வருகிறாயா? என்று கேட்டுள்ளார். தீவிர ரஜினி ரசிகரான பாலகணபதி நண்பரின் அழைப்பை அடுத்து தனது வேலை திட்டத்தை மாற்றிக்கொண்டு ரூ.40,000 பணத்துடன் ரஜியைப் பார்க்க கலைவாணர் அரங்கத்துக்கு சென்றார். அங்கே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினியை தனது செல்போனில் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் தான் வைத்திருந்த ரூ.40,000 பணம் காணவில்லை என்பதை உணர்ந்தார். கூட்டத்தில் யாரோ பணம் பறிபோனதையடுத்து அவர் உடனடியாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு சென்று பணம் தொலைந்தது பற்றி புகார் அளித்துள்ளார்.

Rajinikanth Rajini Kanth Rajini Makkal Mandram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment