Advertisment

காட்டுத்தீப் போல் பரவிய வதந்தி.. 18ம் தேதி பள்ளி விடுமுறையா? அமைச்சர் பதில்

ஜனவரி 18-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை என சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை பொதுமக்களும், மாணவர்களும் நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news

Puducherry schools reopen postpone

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையாக 4 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை மறுதினம் 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

Advertisment

இது குறித்து சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என பரவிய செய்தி தவறு.

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

பொங்கல் விடுமுறை 17-ம் தேதியுடன் முடிகிறது. 18-ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல தொடங்கும். பொங்கல் திருநாளை கொண்டாட வெளியூருக்கு சென்ற பலரும் சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் நேரிடும் சமயத்தில் சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் அதை பள்ளி நிர்வாகங்களும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சிரமத்திற்காக பதினெட்டாம் தேதி விடுமுறை என அறிவித்தால் மாணவர்களும் அடுத்த நாள் வரலாம் என கொஞ்சம் அலட்சியமாக செயல்படும் சூழல் ஏற்படலாம். இதனால், வரும் 18-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை என சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை பொதுமக்களும், மாணவர்களும் நம்பி ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamilnadu Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment