Advertisment

6-ம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் ரம்மி பாடம்; உடனடியாக நீக்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை

ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து வரும் சூழலில், 6-ம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் ரம்மி எப்படி விளையாடுவது என விளக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rummy Lesson in sixth standary Maths book, Anbumani Ramadoss shocking because rummy lesson, rummy lesson, 6ஆம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் ரம்மி பாடம், ரம்மி பாடத்தை நீக்க அன்புமணி கோரிக்கை, அன்புமணி அதிர்ச்சி, anbumani demand to drop rummy lesson, Tamil Latest News, Tamil Live News, Anbumani, tamil nadu, anbumani ramadoss, rajya sabha, students

ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், 6-ம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் சீட்டுக்கட்டுகளை கொண்டு ரம்மி எப்படி விளையாடுவது என்று விளக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், ரம்மி பாடத்தை பாடநூலில் இருந்து நீக்கி புதிய பாடநூலை அச்சிட்டு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து பாமக இளைஞரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும்.

முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத்தராது; ரம்மியைத் தான் கற்றுத் தரும்.

ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மானவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது.

ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்த பாடம் மாணவர்களின் கண்களில் படக்கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்த பாடம் இல்லாத புதிய பாடநூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Anbumani Ramadoss Pmk School Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment