Advertisment

திராவிட பல்கலைக்கழகத்தில் பண்டைய தமிழ் மொழி ஆராய்ச்சி : தமிழக அரசின் உதவியை நாடும் ஆந்திரா

புதிய கட்டிடத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளோம்

author-image
WebDesk
New Update
Dravidian university, tamil news, tamil nadu news, news in tamil,

Andhra Pradesh Dravidian Varsity : குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு நிதி மற்றும் தளவாட ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்காக கட்டப்படும் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்படும் கட்டிடத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

Advertisment

திராவிட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தும்மல ராமகிருஷ்ணா, புதன்கிழமை அன்று செய்தியாளார்கள் சந்திப்பில் “திங்கள் கிழமை அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசியது குறித்தும் இந்த தேவைகளை மேற்கோள்காட்டி மெமோராண்டம் வழங்கினார் என்றும் குறிப்பிட்டார். தமிழ் கவிஞர்கள் பலரின் முக்கியமான படைப்புகள் வெளியாக மிக முக்கிய பங்கை இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஆற்றியுள்ளது என்று அவர் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில், தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொள்ள ஆர்வம் அதிகரித்துவருகிறது. மேலும் தமிழ் படிப்பை வலுப்படுத்துவதில் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

”எங்களின் முன்மொழிவைக் கண்டு மு.க.ஸ்டாலின் மிகுந்த ஆர்வம் காட்டியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய கட்டிடத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறினார்.

இதற்கு முன்பாக திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் ரூ. 3 கோடி நிதி உதவியுடன் பல்கலைக்கழகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 2018ம் ஆண்டு திறக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் "தொல்காப்பியன் ”சேர்" அமைப்பதற்கான திட்டம் விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று துணைவேந்தர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் தமிழ் வெளியீடுகளின் தொகுப்பு பண்டைய தமிழ் மொழிகள் மற்றும் ஆய்வுகள் குறித்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல்வ்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment