சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞானசேகரன் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதில், பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 24-ம் தேதி எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
23-ம் தேதி இரவு சுமார் 7.45 மணியளவில் மாணவி தனது நண்பருடன் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஆய்வக கட்டிடத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஞானசேகரன் அங்கு வந்து இருவரையும் தாக்கி, மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
ஞானசேகரன் தினமும் 7 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்திற்குள் சென்று இதே வேளையில் ஈடுபட்டு வந்துள்ளார். தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் ஞானசேகரன் போனை ஆய்வு செய்ததில் பல பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் முக்கியமாக இரவு நேரத்தில் கடையை மூடிவிட்டு செல்லும் நேரத்தில் இதுபோன்று பெண்களிடம் அத்துமீறி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“