பா.ஜ.க-வில் அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அண்ணாமலை தேசியக் கட்சியில் ஏராளமான பெண்கள் இணைகிறார்கள் என்று புதன்கிழமை பதிலளித்தார்.
பா.ஜ.க-வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகியது குறித்து பேசிய, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் குறித்து தனக்கு வருத்தமில்லை என்றும், அத்தகைய நபர்கள் எங்கிருந்தாலும் நலமுடன் இருக்க வாழ்த்துவதாகவும் கூறினார்.
‘பா.ஜ.க-வில் அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று காயத்ரி ரகுராம் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியதற்கு அண்ணாமலை புதன்கிழமை பதிலளித்தார்.
“யாராவது கட்சியை விட்டு விலகினால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்” என்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.
காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அடிக்கடி இதுபோல சில ஊடகங்களில் குற்றம்சாட்டி செய்தி வெளியாகிறது. காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டையும் அந்த வகையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுகூறினார்.
“கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள்… நான் (ஆளும்) தி.மு.க-வை கடுமையாக எதிர்க்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். சில உள் பிரச்சனைகள் (பாஜகவில்) உள்ளன ஆனால், சில நபர்களின் தொடர்புகள் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஒரு குறிப்பிட்ட ஊடகம் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் என் பதில் மௌனம்தான். மக்கள் பார்த்து முடிவு செய்வார்கள். கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கும் இதே நிலைதான். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் நலமடைய வாழ்த்துகிறேன்” என்று அண்ணாமலை கூறினார்.
பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்த காயத்ரி ரகுராம், பெண்களுக்கு வரவேற்பு, சம உரிமை மற்றும் பெண்களுக்கு மரியாதை, பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் பா.ஜ.க-வில் இருந்து விலகத் முடிவு செய்ததாகக் கூறினார். “அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் வெளியாளாகக் கருதி ட்ரோல் செய்யப்படுவதை நன்றாக உணர்கிறேன்” என்று காயத்ரி ரகுராம் ட்வீட் செய்திருந்தார்.
காயத்ரி ரகுராம், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு பா.ஜ.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, காயத்ரி ரகுராம் தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினரை சந்தித்ததாக குற்றம் சாட்டி, “துரோகிகளுக்கு இடமில்லை” என்று கோபமாகக் கூறினார். இருப்பினும், ரகுராம், இது தனது நண்பரின் பிறந்தநாள் விழா என்றும், அங்கு யார் அழைக்கப்பட்டார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.