Advertisment

தமிழக அரசுக்கு பாராட்டு: மோடி சந்திப்புக்குப் பிறகு அண்ணாமலை பேட்டி

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ” தற்போதைய சூழலில் அரசியல் பேச நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
தமிழக அரசுக்கு பாராட்டு: மோடி சந்திப்புக்குப் பிறகு அண்ணாமலை பேட்டி

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ” தற்போதைய சூழலில் அரசியல் பேச நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதவது “தமிழகத்திற்கு இன்றொரு சரித்திர நாள். பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்து 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை துவக்கி வைத்தார். பிரதமர் மோடி முக்கியமான விஷயங்களை பேசினார். தமிழக கலாச்சாரத்தை சரியாக காட்டும் வகையில் மிக அற்புதமான காட்சியை வடிவமைத்திருந்தார் முதல்வர். கிட்டதட்ட 5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட தமிழ் பெருமையை உலகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துச் சென்றுள்ளார்.

பாஜக நிச்சயம் இதை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. இன்று பிரதான படுத்தப்பட வேண்டியது நமது நாடு, இந்தியா, தமிழகத்தை பிரதான படுத்த வேண்டும். இது நடந்திருக்கிறது. குறிப்பாக முதல்வர் பேசியபோதும், பிரதமர் பேசியபோதும் நமது நாட்டை பிரதானபடுத்தியுள்ளனர். தொடக்க விழாவை அற்புதமாக நடத்திக்காடியதற்கு தமிழக பாஜக சார்பில் தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தோம்.

சென்னை மாநகரம் முழுவதிலும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஒரு கட்சியின் தொண்டனாக எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் ராஜ்பவனில் பாஜகவில் புதிதாக இணைந்தவர்களை பிரதமர் சந்திதார். அரசியல் தொடர்பாக எதுவும் பேசபடவில்லை. பிரதமருக்கு தமிழக கலச் சூழல் தெரியும். அவருக்கு தெரியாத ஒன்றையும் நான் சொல்லப்போவதில்லை. அரசியல் பேசும் சூழல் இப்போது இல்லை. பிரதமர் மிகவும் உற்சாகமாக இருந்தார். பாஜக என்பது கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி.

 அதனால் கட்சியின் கொள்கையில் சமரசம் ஏற்படாது. மேலும் இன்றைய நிகழ்வில் முதல்வரின் நடவடிக்கை மற்றும் பேச்சு சரியாக இருந்தது. சென்ற முறை பேசியதுபோல் அவர் பேசவில்லை. கூட்டணி என்ற பேச்சுக்கு இடம் இல்லை. ஒரு நிகழ்ச்சியை நன்றாக செய்திருக்கிறார்கள் என்று பாராட்டுகிறோம். மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வந்திருக்கும் தீர்ப்பு சரியானது. நேற்று இரவு முதல் பிரதமர் படம் இடம் பெறும்படியாக சில நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. எதிர்காலத்தில் வரும் நிகழ்வுக்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக இருக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment