Advertisment

தமிழகத்திற்கு மத்திய மருத்துவக் குழு: அண்ணாமலை அவசர கடிதம்

தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் பரவலைக் கண்டறிய மத்திய மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும் எனக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai letter to Union Health Minister, BJP, Annamalai K, H1N1 virus, influenza, Tamil Nadu, Children

தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை

தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் பரவலைக் கண்டறிய மத்திய மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும் எனக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை மதிப்பிடுவதற்கும், மாநில அரசுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு மருத்துவக் குழுவை தமிழகத்திற்கு அனுப்புமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணாமலை தனது கடிதத்தில், மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 200 பேர்கள் பாதிப்பு அடைந்து வருவதால் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும், மொத்த நோயாளிகள் இப்போது 1,044 ஆக அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அளித்த தகவல்படி, 364 நோயாளிகளுக்கு எச்1என்1 காய்ச்சல் பாதிப்புகள் இருந்தன. “சிறு குழந்தைகளிடையே H1N1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரியது. புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களாக எச்1என்1 காய்ச்சல் அறிகுறிகளுடன் தினமும் சுமார் 600 குழந்தைகள் வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து தற்போது தமிழகத்தில் கடலூருக்கும் பரவி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment