மதுரையில் வாகன போக்குவரத்து மாற்றம் – பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய புதிய வழித்தடங்கள் அறிவிப்பு

மதுரையில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரப் போக்குவரத்து போலீசார் சில தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளனர்.

மதுரையில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரப் போக்குவரத்து போலீசார் சில தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
madurai

மதுரை நகரத்தில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், பசும்பொன் குருபூஜை விழா மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்படும் போக்குவரத்து சிரமங்களை குறைக்கவும் நகரப் போக்குவரத்து போலீசார் சில தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளனர். பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கமான வழித்தடங்களின் வழியாகவே செல்வது தொடர்ந்தாலும், சில முக்கிய இடங்களில் மாற்று வழிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் – எம்.எம். விடுதி சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி, எப்.எப். சாலை, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, பெரியார் மாளிகை, அழகா்கோவில் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி தமுக்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக அண்ணா பேருந்து நிலையத்தை அடையலாம்.

ஆரப்பாளையம் மற்றும் பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து பனகல் சாலை நோக்கி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் – கொன்னவாயன் சாலை, தத்தனேரி பாலம், கபடி வட்டச்சாலை வழியாக வைகை வடகரை சாலை, குலமங்கலம் சாலை சென்று வருமானவரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, பீ.பீ. குளம் சந்திப்பு வழியாக வடமலையான் மருத்துவமனை, எஸ்.பி. பங்களா சந்திப்பு வழியாக பனகல் சாலை நோக்கிச் செல்லலாம்.

அதேபோல், இருசக்கர வாகனங்கள் ஆரப்பாளையம் மற்றும் பாத்திமா கல்லூரியிலிருந்து செல்லூா் கபடி வட்டச்சாலை, எம்.எம். விடுதி சந்திப்பு வழியாக மேற்கண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் இந்த தற்காலிக மாற்றங்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisment
Advertisements
Traffic Diversion Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: