Advertisment

CAA Protest Updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CAA Protest 1

CAA Protest 1

Anti CAA Protest : சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. இதனைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisment

பிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்திய நிலையில், யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் ஒருவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கல்வீச்சில் காயம் அடைந்த மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், போலீசாரின் தடியடி மற்றும் கைதை கண்டித்து, சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால், கிண்டி, விமான நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார்.

டிராஃபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

 

Live Blog

CAA Protest Updates குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.



























Highlights

    15:19 (IST)15 Feb 2020

    கார்த்தி சிதம்பரம் கண்டனம்

    காவல்துறைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் கடும் கண்டனம்.

    15:13 (IST)15 Feb 2020

    முஸ்லிம்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய இந்து பெண்கள்

    14:44 (IST)15 Feb 2020

    கைக்குழந்தைகளுடன் போராட்டம்

    குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றவர்களின் மனதை அசைத்துப் பார்த்தது. 

    14:27 (IST)15 Feb 2020

    விசிக அறிக்கை

    #CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    14:19 (IST)15 Feb 2020

    உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்

    தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆளும் அதிமுக-விடம் கோரிக்கை வைத்துள்ளனர்

    13:47 (IST)15 Feb 2020

    வானைப் பிளக்கும் கோஷங்கள்

    வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்கள் வானைப் பிளக்கின்றன. 

    13:20 (IST)15 Feb 2020

    போராட்டத்தில் குவிந்த பெண்கள்

    சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றிருக்கும் பெண்கள் 

    13:08 (IST)15 Feb 2020

    வலுக்கும் போராட்டம்

    நேற்றிரவு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி 

    12:46 (IST)15 Feb 2020

    வண்ணாரப்பேட்டையில் திரண்டிருக்கும் பெண்கள்

    வண்ணாரப்பேட்டையில் கூடியிருக்கும் போராட்டக்காரர்கள் - படங்கள் ஜானார்தன் கெளஷிக்

    12:19 (IST)15 Feb 2020

    நேற்றிரவு போலீஸார் நடத்திய தடியடி

    12:11 (IST)15 Feb 2020

    திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு

    திருவாரூரில் மறியல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். திருவாரூரில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    11:57 (IST)15 Feb 2020

    போராட்டத்தில் குவிந்த பெண்கள்

    இன்று காலை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற போராட்டத்தில் திரண்டிருந்த பெண்கள் 

    11:37 (IST)15 Feb 2020

    சென்னையில் ஷஹீன் பாக்

    வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இஸ்லாமியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தர்ணா நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    11:25 (IST)15 Feb 2020

    கத்திப்பாரா போக்குவரத்து நெரிசல்

    நேற்றிரவு நடந்த போராட்டத்தின் போது சென்னை கத்திப்பாராவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 

    11:12 (IST)15 Feb 2020

    தடியடி சம்பவத்துக்கு கண்டனம்

    சென்னையில் நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்து நீலகிரி குன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

    11:10 (IST)15 Feb 2020

    2-வது நாள் போராட்டம்

    தொடர்ந்து இரண்டாம் நாளாக வண்ணாரப்பேட்டையில், நடந்து வரும் போராட்டம் 

    10:39 (IST)15 Feb 2020

    சென்னை மவுண்ட் ரோடு போராட்டம்

    நேற்றிரவு சென்னை மவுண்ட் ரோடில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணி 

    10:31 (IST)15 Feb 2020

    தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம்

    சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு தொடங்கிய, குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம் பின்னர் தமிழகம் முழுவதும் வெடித்தது. 

    10:27 (IST)15 Feb 2020

    விழுப்புரத்தில் 200 பேர் மீது வழக்குப்பதிவு

    விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடியை கண்டித்து நேற்று இரவு விழுப்புரத்தில் சாலை மறியல் செய்தனர். செங்குன்றத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    10:13 (IST)15 Feb 2020

    முதல்வருடன் காவல் ஆணையர் சந்திப்பு

    சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடைபெற்றது. சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் எனத் தகவல்கள் கூறுகின்றன. 

    10:02 (IST)15 Feb 2020

    போராட்டத்தில் குவிந்த பெண்கள்

    வண்ணாரப்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர் 

    09:49 (IST)15 Feb 2020

    போலீஸாரின் லத்தி சார்ஜ்

    இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் அமைதியான சூழலே நிலவியது. ஆனால் நேற்றிரவு நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடியில் ஈடுபட்டது, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் உருவாகக் காரணமாக இருந்தது. 

    சென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, மதுரை மாவட்டம் நெல்பேட்டை, தேனி, திருச்சி,செங்குன்றம், வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் சென்னையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்ததும், பிற இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இது நள்ளிரவில் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment