Advertisment

நவ.4-ல் தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள்: பெரம்பலூரில் ஸ்டாலின் பேசுகிறார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.

author-image
WebDesk
New Update
M K Stalin held legal advice in 10 percent reservation

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. பெரம்பலூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்றுவார் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என்று அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளிவந்தவுடன் - இந்தியாவிலேயே முதல் முதல்-அமைச்சராக திமுக தலைவர்தான் அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. பிரதமருக்கு, முதல்-அமைச்சர் அவர்கள் 16.10.2022 அன்று கடிதம் எழுதி – இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், "அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது" என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழ்நாடு மக்களிடையை விளக்கிடும் வகையிலும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.

இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment