Advertisment

தமிழ்நாடு தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி மரணம்

வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர் டாக்டர் இரா நாகசாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடநலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 23) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

author-image
WebDesk
New Update
Archeological Scholar Dr R Nagaswamy passes away, inscription scholar Dr R Nagaswamy passed away, Dr R Nagaswamy died, Dr R Nagaswamy death, தமிழ்நாடு தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி மரணம், கல்வெட்டியல் அறிஞர் நாகசாமி மரணம், நாகசாமி காலமானார், tamilnadu, R Nagaswamy death, tamilnadu history

இந்திய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடநலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 23) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

Advertisment

இந்திய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் முக்கிய பங்களிப்புகளை செய்தவர் டாக்டர் இரா. நாகசாமி. ஆகஸ்ட் 10, 1930ல் பிறந்த இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டப் படிப்படிப்பை முடித்தாவர். டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த இரா. நாகசாமி, 1959 முதல் 1963 வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார்.

1963 முதல் 1966 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தார். தமிழகத்தில் பல புதிய கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கண்டுபிடித்து படித்து படியெடுத்து ஆவணப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். டாட்கர் இரா. நாகசாமியின் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசு, கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அதே போல, இந்திய அரசு இவருக்கு 2018ம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கி கௌரவித்தது.

டாக்டர் இரா. நாகசாமி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டு தொடர்பாக ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். Thirukural - An Abridgement of Sastras, Studies in Ancient Tamil and Society, Vedic Roots of Hindu Iconography, Vishnu Temples of Kanchipuram, Brhadisvara Temple: Form and Meaning உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் எழுத்து பணிகளில் ஈடுபட்டுவ் அந்த டாக்டர் இரா. நாகசாமி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. டாக்டர் இரா. நாகசாமியின் மறைவுக்கு வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து அவருடைய பணிகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu History
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment