இஸ்லாம் மக்களின் கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்த பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்:
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவில் கொள்ளும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
சென்னையில் நடைபெற்ற தொழுகை
இப்பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, மசூதிக்கு சென்று குடும்பத்துடன் இணைந்து தொழுகை செய்து, பின்னர் இனிப்புகளும் இறைச்சி உணவையும் பகிர்ந்து உண்ணுவது வழக்கம்.
குர்பானி கொடுக்கப்படுவதற்கான அவசியம் உங்களுக்கு தெரியுமா?
இதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாம் மக்கள் இந்த சிறப்பான நாளை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
சென்னை அண்ணா சாலை அருகே நடைபெற்ற தொழுகை
இத்தகைய சிறப்பான பண்டிகையை தமிழகத்தில் உள்ளவர்களும் இன்று விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். காலை எழுந்து நீராடி, அனைவரும் புத்தாடை உடுத்தினர்.
இந்த பண்டிகையின் முக்கியத்துவமும் அதன் தனிச்சிறப்பும்!
பின்னர் அவர் அவர்கள் வழக்கமாக செல்லும் தர்காவிற்கு சென்று இன்று சிறப்பு தொழுகை செய்தனர். பின்னர் கட்டி அணைத்து ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டனர்.