மாட்டுக்கறி மோதல் – நாடகமாடும் மணிஷ் : பரபரப்பு வீடியோ

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து வைத்த மாணவர் சூரஜ் மீது, இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரது கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சூரஜை தாக்கிய மாணவர் மணிஷை உள்பட 9 பேரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த […]

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து வைத்த மாணவர் சூரஜ் மீது, இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரது கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சூரஜை தாக்கிய மாணவர் மணிஷை உள்பட 9 பேரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் மணிஷின் கை உடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.காமிற்கு கிடைத்த வீடியோவில், மணிஷ்க்கு எந்த காயமும் இல்லை என்பது தெரிகிறது. சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மணிஷூம் அவரது நண்பர்களும் மருத்துமனை வளாகத்தில், சூரஜின் நாண்பர்களிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது சிவப்பு டீசர்ட் அணிந்து மணிஷூம் உடன் உள்ளார். அவர் கையில் காயம் இல்லை என்பதை வீடியோ பார்த்தால் தெரியும். புகாரை வாபஸ் பெறாவிட்டால் கவுண்டர் கம்ப்ளைட் கொடுப்போம் என்று மணீஷின் நண்பர்கள் சொல்வதும் தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Beef clash dramatic manish video evidence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com