Advertisment

பரதஞ்சலி அறக்கட்டளை நிகழ்த்தும் மாபெரும் ஆன்லைன் நடன விழா!

பரதஞ்சலி அறக்கட்டளை தனது 30-வது ஆண்டு நிறைவையொட்டி, பிரம்மாண்ட ஆன்லைன் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Bharathanjali trust conducting online dance fest Anita Guha tamil news

Bharathanjali trust conducting online dance fest Anita Guha

Bharathanjali Trust conducting Online Dance Fest Tamil News : பரதஞ்சலி அறக்கட்டளை தனது 30-வது ஆண்டு நிறைவையும், சத்ய சாய் பாபாவின் 95-வது ஜெயந்தியையும் முன்னிட்டு, நவம்பர் 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிறு) மற்றும் 23 (திங்கள்) ஆகிய தினங்களில் ஆன்லைன் நடன விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆன்லைன் நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்குத் தொடங்கும்.

Advertisment

இத்திருவிழாவின் முதன்மை விருந்தினர்கள், கிளீவ்லேண்ட் வி வி சுந்தரம், ஆனந்த சங்கர் ஜெயந்த் மற்றும் ராம வைத்தியநாதன். மேலும், இதில் ஏராளமான கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும்.

அனிதா குஹாவால் நிறுவப்பட்ட பரதஞ்சலி, ஐந்து வயதிலிருந்து 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரதநாட்டியம் பயிற்சி அளித்து வருகிறது. தனது நிறுவனத்துடன் 30 வருடப் பயணத்தை நினைவுபடுத்திய குஹா, “பரதநாட்டிய ஆசிரியராக 30 ஆண்டுக்கால புகழ்பெற்ற கலைப் பயணத்திற்காக சுவாமி ஸ்ரீ சத்யா பாபாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆயிரம் மைல் பயணம் ஒரு படியில் தொடங்குகிறது. அதேபோல், பரதஞ்சலியும் என் சிறிய அறையில் ஒரு சில அழகான குழந்தைகளின் நடனத்துடன் தொடங்கியது. நடுத்தர வர்க்கப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான பரதநாட்டியம் கல்வியை வழங்குவதற்கான பிரதான குறிக்கோளுடன் எனது திட்டமிடப்படாத கற்பித்தல் பயணம் உள்ளது” எனக் கூறினார்.

இந்தத் திருவிழாவின் தொடக்க நாளில், பாரதஞ்சலிய இளைய மாணவர்களின் நடனத்தைத் தொடர்ந்து, மூத்த மாணவர்களின் தனி நிகழ்ச்சிகள் தொடரும்.

இரண்டாவது நாளில் பல ஆண்டுகளாக அதன் பல தயாரிப்புகளில் ஒரு பகுதியாக இருந்த பரதஞ்சலியின் ஒருங்கிணைந்த விருந்தினர்கள், கலைஞர்கள் மற்றும் பிற ஒத்துழைப்பாளர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அந்த வரிசையில் நிதீஷ் குமார் மற்றும் இந்து நிதீஷ், பவித்ரா கிருஷ்ணா பட், மிந்துன் ஷியாம், ரென்ஜித் மற்றும் விஜ்னா, டாக்டர் ஜானகி ரங்கராஜன், மாலிகா கிரிஷ் பனிக்கர், யோகேஷ்குமார் சோமன்னா, ஜெயலட்சுமி ஆனந்த் மற்றும் ஆனந்த் சச்சிதானந்தன், சுமித்ரா சுப்பிரமணியம், ஸ்ருதிப்ரியா ரவி, கைலாசநாதன் பிகே, அர்ஜுன் ராகேஷ் மற்றும் அஸ்வின் சித்தார்த், மதுசூதன் மற்றும் குழு ஆகியோர் உள்ளனர்.

திருவிழாவின் பிரமாண்டமான இறுதிப் போட்டியில் நாமா ராமாயணத்தின் பிரீமியர் நிகழ்ச்சி இடம்பெறும். இது, தொற்றுநோய்களின்போது உருவாக்கப்பட்டது மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பரதஞ்சலியின் 60 மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிராண்ட் ஃபைனலில் பரதஞ்சலியின் பழைய தயாரிப்புகளின் பகுதிகளும் இடம்பெறும்.

இந்த மாபெரும் திருவிழா ஸ்ட்ரீமிங்கை www.youtube.com/AnithaGuhasBharathanjali என்கிற இணைப்பில் கண்டு மகிழலாம். 24 மணி நேரமும் இந்த வெப்சைட்டில் கிடைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment