Advertisment

என்னப்பா இங்க சத்தம்? சேகர்பாபுவை கண்டதும் அமைதியான “பாரத் மாதா கீ ஜெய்” கோஷம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதே வீடியோவை பகிர்ந்து ஆளும் கட்சி அமைச்சர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை மிரட்டும் காட்சி என்று பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news in tamil: 2000kg jewels in temples could get converted to gold bars; TN minister sekar babu

Sekharbabu arrived for flood relief work: சென்னையில் கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மக்கள் குறைகள் கேட்டு அதனை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை பார்த்ததும் பாஜகவினர் பலர் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர்.

Advertisment

இதைக் கேட்ட அமைச்சர் நேராக கோஷமிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து என்ன அரசியல் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷம் அப்படியே மெதுவாக அடங்கி இல்லண்ணா, இல்ல… அரசியல் எல்லாம் செய்யல மனுக்கொடுக்க தான் வந்தோம் என்று பேச்சை மாற்றினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜீப்பில் இருந்து இறங்கிச் சென்று கோஷமிட்ட இடத்திற்கு சென்றார். எதற்காக இங்கே நிற்கின்றீர்கள் என்று கேட்ட போடு மனுக்கொடுக்க வந்தோம் என்று பவ்யமாக பாஜக தொண்டர்கள் பதில் அளித்தனர். இந்த காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு ஒருவரை மட்டும் வாருங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் அமைச்சர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதே வீடியோவை பகிர்ந்து ஆளும் கட்சி அமைச்சர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை மிரட்டும் காட்சி என்று பதிவிட்டுள்ளார். நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவர்களையும் விட மாட்டீர்கள் என்றும் மேற்கோள்காட்டி குற்றம் சாட்டியுள்ளார் அண்ணாமலை

மேலும் படிக்க : சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் போது போட்டோஷூட் நடத்திய அண்ணாமலை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment