Advertisment

கங்கையில் புனித நீராடிய வானதி சீனிவாசன்.. கடவுளிடம் வைத்த கோரிக்கை என்ன?

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கங்கையில் தாம் நீராடிய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

author-image
Jayakrishnan R
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP Mahila MLA Vanathi Srinivasan bathed in the holy Ganges and prayed

ரிஷிகேஷ் கங்கை நதியில் நீராடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் ஆளுனர் ஆர்.என். ரவிக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்துக்கு மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் 144 பேர் ஆதரவு அளித்திருந்தனர். முன்னதாக அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விட்டனர்.

Advertisment

எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை ஆர்.பி. உதயக் குமாருக்கு வழங்கப்படவில்லை. இது மரபுக்கு எதிரானது என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இது தொடர்பாக தாம் பலமுறை விளக்கம் அளித்துவிட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதனால் அ.தி.மு.க.வினர் அவையில் கூச்சலிட்டனர். இதற்கிடையில் ஆளுனருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. இந்த நிலையில் இன்று வானதி சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

இதனால் அவர் எங்கே? என்ற கேள்விகள் எழும்பின. இந்த நிலையில் வானதி சீனிவாசன் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தாம் ரிஷிகேஷில் கங்கை நதியில் உலக மக்களின் நன்மைக்காக நீராடி வணங்கியதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tn Bjp Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment