Advertisment

OPS vs EPS: பாரதிய ஜனதா ஆதரவு யாருக்கு? பேரா. சீனிவாசன் பதில்

பா.ஜ.க.வின் ஆதரவு ஓ.பி.எஸ்.கா? அல்லது இ.பி.எஸ்..கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
BJP Srinivasan said that we support the AIADMK Symbol

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பேரா. ராம சீனிவாசன் பதில் அளித்தார்.

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவு ஓ.பி.எஸ்.கா? அல்லது இ.பி.எஸ்..கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக பாஜக நிர்வாகி பேராசிரியர் சீனிவாசன் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்தப் பிரச்னைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரட்டை இலை யாருக்கும் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்போம் என முன்பே சொல்லியிருந்தோம். அந்தச் சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது.

அப்போது நாங்கள் அவர்களை ஆதரித்தோம். தற்போது, உச்ச நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. நாங்கள் அவரை (எடப்பாடி பழனிசாமி) ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Aiadmk Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment